உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மாம்பழ புளிஷ்ஷேரி

 


தேவையானப் பொருட்கள்

  • வேகவைக்க
  • ==========
  • பழுத்த மாம்பழம் - 1(லேசாக பழுத்தது)
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி - 1/4 இன்ச் துண்டு
  • சின்ன வெங்காயம் - 2
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • தயிர் - 1 கப்
  • தாளிக்க
  • ========
  • தேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  • ஜீரகம் - 1/4 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
  • வரமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - 10 இலை

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் வேகவைக்கக் கொடுத்தவற்றில் தயிர் தவிற மற்றுள்ளவை சேர்த்து உப்பிட்டு தண்ணீர் 1/2 கப் ஊற்றி வேக விடுங்கள்.மாம்பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள்
  • 15 நிமிடம் வெந்ததும் மூடி திறந்து வெந்த மாம்பழத்தை உடைத்து விடுங்கள்
  • பின் அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி உடனே தீயை அனைத்து விடுங்கள்.கொதிக்கக் கூடாது
  • இப்பொழுது தேங்காய் எண்ணையில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாய் தாளித்து மேலே உள்ள மாம்பழ கூட்டில் ஊற்றி இளக்கி பரிமாறுங்கள்..

குறிப்பு:

இதை ஒரு டிஷ்ஷாக மட்டும் சாப்பிட முடியாது..வெஜிடேரியன் சமையலில் சாதத்துக்கு சாம்பார்,ரசம்,பொரியல்,கூட்டு வைப்பதுடன் இதுவும் 2 ஸ்பூன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வழங்கியவர்

தளிகா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு 10 நிமிடம் 20 நிமிடம்
random food image


comments