மீன் பஜ்ஜி - 3

தேதி: January 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள் இல்லாத மீன் - அரை கிலோ
மீன் மசாலா:
காஷ்மீர் மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
சீரகதூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பஜ்ஜி மாவு கலக்க:
கடலை மாவு - முக்கால் கப்
அரிசி மாவு - கால் கப்
கார்ன் ப்ளார் மாவு - ஒரு மேசைக்கரண்டி
இட்லி சோடா - கால் தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - இரண்டு பின்ச்
சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
காஷ்மீர் சில்லி பொடி - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு பின்ச்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

மீனை சுத்தம் செய்து முள்ளை அகற்றி விட்டு இரண்டு அங்குல நீளம் வெட்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறவைத்து கழுவி எடுக்கவும்.
பிறகு மீன் மசாலாக்களை போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பஜ்ஜி மாவுக்கு கரைக்க கொடுத்துள்ளவைகளை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
ஊறியதும் மாவு கலவையில் மீனை ஒவ்வொன்றாக முக்கி பொரித்தெடுக்கவும்.


மஞ்சள் தூள், உப்பு கூட மீன் வாடையை போக்கும். காஷ்மீர் சில்லி என்பது நல்ல ரெட் கலரில் இருக்கும். அது இல்லையென்றால் சாதா மிளகாய் தூள் + ரெடி கலர் பொடி போடுங்கள்.

மேலும் சில குறிப்புகள்