மீன் கட்லட் - 1

தேதி: January 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வஞ்சிரம் மீன் (அ) முள் இல்லாத மீன் - அரை கிலோ
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
முட்டை வெள்ளை கரு - மூன்று
கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) க்ரெம்ஸ் பவுடர் - மீனில் முக்க தேவையான அளவு
மைதா - ஒரு தேக்கரன்டி


 

மீனை சுத்தம் செய்து முள் எடுத்து விடவும்.
எலுமிச்சை சாறில் (அ) மஞ்சள் (அ) வினிகரில் ஊற வைத்து கழுவவும்.
மேலே குறிப்பிட்டுள்ள மசாலாகளை கெட்டியாக பிசைந்து மீனில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
முட்டையின் வெள்ளை கருவை நல்ல நுரை பொங்க அடித்து அதில் ஊறிய மீனை இரு பக்கமும் தோய்த்து க்ரம்ஸ் பவுடர் (அ) கார்ன் ப்ளேக்ஸை பவுடராக்கி அதில் மைதாவை கலந்து இரு பக்கமும் தோய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து டீப் ஃப்ரை செய்யவும்.


கார்ன் ஃப்ளேக்ஸை சேர்த்தால் மாவு நல்ல க்ரிஸ்பியாக இருக்கும். முட்டை மஞ்சள் கரு சேர்த்து அடித்து முக்கினால் பொரிக்கும் போது எண்ணெய் நுரைத்து கொண்டே இருக்கும் மீன் உள்ளே வெந்ததா இல்லையா என்பது தெரியாது. ஆகையால் வெள்ளை கரு மட்டும் போதும். இந்த கட்லெட் சும்மா உள்ள போய் கொண்டே இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

//இந்த கட்லட் சும்மா உள்ள போய் கொண்டே இருக்கும்.//

வைத்துகுள்ள இப்படி உள்ளே போய்ட்டே இருந்தா
உடம்பும் பெருசாகிட்டே போகுமே!!!! ஹிஹிஹி...

ம்ம்...நீங்க எலுதியிருக்கும் விதமே செய்து சாப்பிட்டே ஆகனும்ன்னு தோனுதே.கன்ட்ரோல் செய்துகிட்டு இருக்கேன்.

செய்முறையைத்தந்த சகோதரிக்கு நன்றிகள்

பர்வீன் அஸ்ஸலாமு அலைக்கும்

மீன் ரொம்ப நல்லது எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் போடாது.
பொடி மீன் நிறைய சாப்பிட்டால் தலை முடி கூட நல்ல வளரும்.
மீன் தலை சூப் கண்களுக்கு ரொப நல்லது.
மட்டன் சிக்கனை விட மீன் குழம்பு ,மீன் பிரை என்றால் இரண்டு புடி நல்ல உள்ள போகும்.
முதல் நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு ஆரோக்கியமா இருகனும் அதை விட வேறு என்ன இருக்கு உலகில்.எப்படி பர்வீன் உங்க தலை வலி எல்லாம் இப்ப பரவாயில்லையா?
ஜலீலா

Jaleelakamal

அன்பு ரகி உங்க பின்னுட்டத்திற்கு ரொம்ப நன்றி
ஜலீலா

Jaleelakamal

நலமா இருக்கீங்களா?
என் தலைபாரம் பரவாயில்லை.விசாரித்தமைக்கு மிகவும் சந்தோஷம்.
ஸ்நாக் போல செய்யும் இந்த மீனை சிறிய துண்டா போடவா இல்லை வட்டமாக போடவா ஒரு ஐடிய தாங்களேன்.
கான்பிளவர் மாவு தானே இல்லை கான் பிளக்ஸ் தூளா?புரியவில்லை கொஞ்ஜம் விளக்குங்களேன்.

அப்பரம் ஒரு சந்தேகம் மீனுக்கு நான் உப்பு போடும் போது அதிகமா போட்டு விடுகிறேன் இல்லாவிட்டால் குறைவா போடுவிடுகிறேன்.சரியாக போட ஒரு டிப்ஸ் கொடுங்களேன்.

அருமை சகோதரி பர்வீன்

கார்ன் பிளார் மவவு பஜ்ஜிக்கு கரைத்து முக்கனும்கார்ன் பிளார் மாவு கிடையாது

கார்ன் பிளேக்ஸை கையால் பொடித்தால் துளகும்.
.இது பிரெட் கிரெம்ஸ் (அ)கார்ன் பிளேக்ஸ் காலையில் பால் ஊற்றி சாப்பிடுவோமே அது.

மீன் ஒரு தடவை அதிகமான பிரையில் ஒன்றும் செய்ய முடியாது அப்போதுமோ உப்பு கம்மியா போடுங்கள்.
மீன் பொரிக்கு முன் ஒரு சிறிய துண்டை டேஸ்ட் பார்த்து விட்டு பிறகு லேசகா தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.
ஆனால் இந்த கட்லட்டுக்கு ஒன்ஸ் போட்டு விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அரை கிலோ விற்கு ஒரு தேக்கரண்டி போடுங்கள்.
சரியாக இருந்தால் ஒகே சாப்பிடும் போது தெரிந்து விடும் அதை வைத்து அடுத்த முறை பார்த்து போடுங்கல்.

ஒரு பெரிய சீலா மீன் என்றால் அப்படியே நாலா போடுங்கள் நடுவில் இருக்கு முள்ளை எடுத்து விட்டால் சாப்பிடும் போது இன்னும் சுலபம்.

ஆனால் மீன் துண்டு உள்ளங்கை சைட் அளவு தின்னாக இருந்தால் நல்லது (அகலம்)

ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் ரெசிப்பி இன்று தான் பிரட்டி எல்லாம் வைத்தேன்.ரஸ்க் தூளில் பிரட்டிக்கொண்டேன்.கான் பிளேக்ஸ் இப்போதைக்கு இனிப்பு சேர்ந்த கான் பிலேக்ஸ் தான் இருக்கிறது.அடுத்த முறை நீங்க சொல்லியபடி கான் பிளேக்ஸ்ள் பிரட்டி பார்க்கிறேன்.டேஸ்ட்டுக்கு ஒன்று இப்போது போட்டு சாப்பிட்டு பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.மிகவும் நன்றி.உங்கள் உடன் பதிலுக்கும் எனது நன்றி.

அன்புடன் பர்வீன்.

மீன் கட்லட்
பர்வீன் இந்த கட்லட் சுடும் போது அடுப்பிலிருந்து நேராகா வாயில் போய்விடும்.
சூடாகாக என் சின்ன பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஜலீலா

Jaleelakamal