பீர்க்கங்காய் கூட்டு

தேதி: January 29, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பீர்க்கங்காய் - 1
சின்ன வெங்காயம் - 150 கிராம்
அரைத்த தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
சிறுப்பருப்பு - 1 1/2 மேசைக் கரண்டி
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

பீர்க்கங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்.
சிறுப்பருப்பை லேசாக வறுத்து வைத்து கொள்ளவும்.
பீர்க்கங்காயில் வெங்காயம், அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மசாலா தூள், உப்பு, சிறுப் பருப்பு அனைத்தையும் போடவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் மசாலா சேர்த்து வைத்த பீர்க்கங்காயை சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும்.
பீர்க்கங்காய் வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்