உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஆந்திரா பெசரட்

 


தேவையானப் பொருட்கள்

  • பாசிப்பயறு (முழுதாக) - 200 கிராம்,
  • பச்சரிசி - 2 மேசைக்கரண்டி,
  • பெரிய வெங்காயம் - 3,
  • இஞ்சி - சிறிது,
  • பச்சை மிளகாய் - 5,
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி,
  • எண்ணெய் - தேவையான அளவு,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • பாசிப்பயறையும், பச்சரிசியையும் ஒன்றாக, 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு ஒரு வெங்காயம், 4 பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து நைசாக கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
  • உப்பு சேர்த்து கலக்கவும்.
  • மீதி வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.
  • மாவை தோசைக்கல்லில் சிறிது மொத்தமாக ஊற்றி, மேலே வதக்கிய வெங்காயம் தூவி முறுகலாக சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:

பெசரட்டுக்கு மிளகாய் சட்னி, வடகறி நல்ல பொருத்தம்.

வழங்கியவர்

இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 5 மணி நேரம். 20 நிமிடங்கள்.
random food image


comments