தேவையானப் பொருட்கள்
- பாசிப்பயறு (முழுதாக) - 200 கிராம்,
- பச்சரிசி - 2 மேசைக்கரண்டி,
- பெரிய வெங்காயம் - 3,
- இஞ்சி - சிறிது,
- பச்சை மிளகாய் - 5,
- சீரகம் - 1/2 தேக்கரண்டி,
- எண்ணெய் - தேவையான அளவு,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- பாசிப்பயறையும், பச்சரிசியையும் ஒன்றாக, 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு ஒரு வெங்காயம், 4 பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து நைசாக கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
- உப்பு சேர்த்து கலக்கவும்.
- மீதி வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.
- மாவை தோசைக்கல்லில் சிறிது மொத்தமாக ஊற்றி, மேலே வதக்கிய வெங்காயம் தூவி முறுகலாக சுட்டு எடுக்கவும்.
குறிப்பு
பெசரட்டுக்கு மிளகாய் சட்னி, வடகறி நல்ல பொருத்தம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
5 மணி நேரம். |
20 நிமிடங்கள். |