சிக்கன் முந்திரி குருமா

தேதி: January 29, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி -3,
பூண்டு - 12 பல்,
இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
நெய் - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
புதினா- 1 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு.

அரைக்க:-
------------
பச்சை மிளகாய் - 6,
தேங்காய் - 1 மூடி (துருவிக் கொள்ளவும்),
முந்திரி - 50 கிராம்,
சீரகம் - 2 தேக்கரண்டி,
கசகசா - 1 மேசைக்கரண்டி,
சோம்பு - ஒன்றரை தேக்கரண்டி,

தாளிக்க:
------------
ஏலக்காய் - 3,
கிராம்பு - 3,
பட்டை - சிறிது,
அன்னாசிப்பூ - 1,
பிரிஞ்சி இலை - 1,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.


 

இஞ்சியை தோல் சீவி, நைசாக அரைக்கவும்.
கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்து இஞ்சி விழுது, சிறிது உப்பு, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தேக்கரண்டி நெய்யில் வறுத்து, நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். புதினாவையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை நைய தட்டி வைக்கவும்
வாணலியில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்
வேக வைத்த கோழிக்கறியை தண்ணீருடன் சேர்த்து கொட்டி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் நறுக்கிய புதினா தூவி இறக்கவும்.


நெய் சோறு, புலாவ், சாதம், பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, இட்லி என எல்லாவற்றிற்கும் பொருந்தும் சகல கலா ராணிதான் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

HI .THIS IS REALLY TASTE.THANKS FOR YOUR GOOD RECEIPE.

அன்பு செந்தில்,
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

it's very easy

அன்பு ஃபாத்திமா,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.