எக் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)

தேதி: January 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 6
வேக வைத்த முட்டை - 2
குருமிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மயோனைஸ் - 2 தேக்கரண்டி


 

வேக வைத்த முட்டையை சிறு சிறு பொடி துண்டுகளாக வெட்டவும்.
அதனுடன் குருமிளகுத் தூள், மயோனைஸ், உப்பு சிறிது சேர்த்து கலக்கி ஒரு ப்ரெட் ஸ்லைஸில் மேல் 3 தேக்கரண்டி வைத்து இன்னொரு ஸ்லைஸால் மூடி மைக்ரோவேவ் அவனில் 10 வினாடி வைத்து எடுத்து பரிமாறவும்.


சிறு குழந்தைகளுக்கு சாண்ட்விச்சாக கொடுத்தால் நல்ல பிடிக்கும். அதுவும் இதில் எதுவும் வெங்காயம், இலை என வாயில் தட்டாததால் சமத்தாக சாப்பிடுவார்கள். மைக்ரோவேவ் அவனில் கடைசியில் வைப்பது ப்ரெட் நல்ல மெதுவாகும். பிள்ளைகளுக்கு சாப்பிட வசதியாக இருக்கும். அப்பொழுதே சாப்பிட்டால் தான் சுவை. டிபன் பாக்ஸில் கொடுத்தனுப்பி விடாதீர்கள். வாடையில் ஸ்கூலை விட்டு விரட்டி விடுவார்கள். எனக்கும் மிகவும் பிடிக்கும் ஆசைக்கு எப்பொழுதாவது லோ ஃபேட் மயோனைஸ் போட்டு சாப்பிடுவேன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Ruby...

That was a very funny P.S.
I will have to try it...

Thanks
ila
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் தளிகா,
இன்று இந்த சான்ட்விச் செய்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது.
என் சக ஆசிரியை ஷேர்ட் லன்ச் நாட்களில் இதுபோல் செய்து, தட்டில் க்ளாட் ராப்பால் சுற்றிப் பாடசாலைக்குக் கொண்டுவருவார். அது வாடை வருவதில்லை. (ஆனால் அவர் சுடவைப்பதில்லை.)

‍- இமா க்றிஸ்

தனிஷா நீங்க சொன்னதும் இது தானே?

ஹாய் இம்மா மிக்க நன்றி.எனக்கும் ஆசை வந்துவிட்டது சாப்பிட.

இதுக்கு பதிவு போட தேடியலைந்தேன்.சுவை அபாரம். சூடாக சாப்பிட ரொம்ப நல்லாயிருந்தது ரூபி. ரெஸ்டாரெண்டில் சாப்பிடும் சாண்ட்விச் சுவை. இருவருக்கும் 2 நாளா மார்னிங்க் டிபன் இதுதான். ஆனால் மயோனைஸ் ரொம்ப பேட் அதுதான் பயம். லோபேட் வாங்க வேண்டும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!