வெங்காய தோசை மற்றும் புதினா சட்னி

தேதி: January 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு - 500 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 இலை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தோசைக்கு சுற்றி ஊற்ற
புதினா சட்னிக்கு:
புதினா இலை - 2 கைப்பிடி இலைகள்
தேங்காய் துருவல் - 3/4 கப்
புளி - 1/2 எலுமிச்சம் பழ அளவு
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் புதினா சட்னிக்கு கொடுத்துள்ளவற்றை எல்லாம் மிக்ஸியிலோ, அம்மியிலோ வைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் தோசைக்கு தேவையான வெங்காயம், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.
தோசைமாவை ஊத்தப்பம் போலவும் அல்லாமல் மெல்லியதாகவும் அல்லாமல் ஓரளவு கெட்டியாக ஊற்றவும்.
மேலே தூவும் வெங்காயம் பிடிக்குமளவு தடிமன், பின் ஊற்றியதும் மேலே ஒரு 4 ஸ்பூன் அளவு வெங்காயத்தை பரவலாக தூவுங்கள்.
மேல் மாவு வெந்துவிடுவதற்குள் வெங்காயம் தூவாவிட்டால் வெங்காயம் ஒட்டாது.
பிறகு மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் ஒரு ஸ்பூன் சுற்றி ஊற்றி வேக விடுங்கள்.
வெங்காயம் உள்ள புறம் நல்ல மொறுகி வெங்காயம் ப்ரவுன் நிறத்துக்கு மாறி மணக்கும். அப்பொழுது தான் சுவை.
இப்பொழுது சூடான தோசையையும், புதினா சட்னியையும் சேர்த்து சுவையுங்கள். இந்த காம்பினேஷன் அருமையாக இருக்கும்.


கொஞ்சமாக வெங்காயம் சேர்த்து நன்கு மொறுக விட்டால் நல்ல சுவையாக இருக்கும். கறிவேப்பிலையும் சேர்ப்பதால் தோசை சூப்பராக இருக்கும். மற்றபடி புதினா சட்னி எல்லோரும் செய்யும் முறை தான். தேங்காய் எண்ணெய் இல்லையென்றால் விட்டு விடலாம். புதினா இல்லையென்றால் மல்லி இலை சேருங்கள் உடம்புக்கும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள தளிகா அவர்களுக்கு,நீங்கள் சொன்னமாதிரியே இன்று வெங்காய தோசையும் சட்டினியும் செய்து பார்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இந்த குறிப்புக்கு நன்றி.பாராட்டுக்கள்.

Be the best of what you are and the Best will come to you :)

மிக்க நன்றி அனு பின்னூட்டத்திற்கு .இன்று தான் கவனித்தேன்.

அன்புள்ள தளிக்கா நலமா?தாங்கள் சொல்லியபடி வெங்காயம் குறைவாக வைத்து செய்தேன் சுவை அருமை.
மிகவும் நன்றி.