மிளகு இடியாப்பம்

தேதி: January 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்து உதிர்த்த இடியாப்பம் - 2 கப்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் - ஒன்று
பொடி செய்ய:
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி


 

எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மிளகு சீரகப்பொடியை போட்டு இடியாப்பத்தையும் போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாலதியக்கா, நேற்று உங்கள் மிளகு இடியப்பம் செய்தேன். சூப்பர். அதென்ன வரமிளகாய்?, நான் செத்தல் மிளகாய் போட்டேன். அதனுடன் கறிவேப்பிலையும் சேர்த்தேன். இன்னுமொன்று, இந்தியாவிலுள்ளவர்கள் தாளிக்கிறபோது கடலைபருப்பு, உளுந்து கட்டாயம் சேர்க்கிறீங்கள். நான் உங்களை கேட்காமல் செய்தது தப்புதான். பருப்புகளை ஊறவிட்டபின்னரா தாளிக்க வேண்டும்?. ஏனெனில் இடியாப்பத்துடன் பருப்பு கொஞ்சம் ஹாட்டாக கடிபடுகிறது.

இடியப்ப பிறியாணி என்றால் அதிக நேரம் எடுக்கும், ஆனால் இது பிறியாணிபோலவே இருக்கிறது, செய்வதும் சுலபம். நான் படமெடுத்தேன். எங்கள் அட்மின் ஏதோ அலுவலாக போய்விட்டார்போலும், வந்ததும் எல்லாப் படங்களையும் இணைப்பார் என நம்புகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா!...வரமிளகாய் என்றால் காய்ந்த மிளகாய்.
நீங்கள் செத்தல் மிளகாய் என்று எதை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே....... ஆமாம் அதிரா இங்கு எல்லாவற்றுக்கும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கும் பழக்கம் இருக்கிறது. அதை ஊறவைக்கவேண்டாம். அப்படியே பச்சையாகவே போட்டு பொன் நிறமாக வறுக்கவேண்டும். இந்த பருப்புகள் வாயில் இடருவது பிடிக்கவில்ல என்றால் வெறும் கடுகு, முந்திரி, தாளித்துக்கொள்ளுங்களேன். கடுகு கீரை வறை செய்ததில்லை. வறை என்றால் என்ன என்று மற்ற குறிப்புகளில் இருந்து தேடிப்பார்த்து கண்டுபிடிக்கிறேன். பாராட்டுக்கு நன்றி அதிரா!..

உங்களிடம் டவுட் கேட்கப் போய், உங்களை டவுட்டில் ஆழ்த்திவிட்டேன். அப்போ சரி, மிளகாய் காய்ந்துவிட்டால் அது செத்தலாகிவிடும் அதனைத்தான் வரமிளகாய் என்கிறீர்கள்..

வறை என்றால் சுண்டல். நாங்களும் அதிகமாக சுண்டல் என்றுதான் கதைப்போம், ஆனால் நான் நினைத்தேன் வறைதான் உங்களுக்கு புரியும் என்று அதனால்தான் வறை என்றேன். இப்போ என்னிடம் இலங்கை இந்திய பாஷைகள் எல்லாமே மிக்ஸிங் ஆகிவிட்டது. எனக்கே சந்தேகமாக இருக்கு, இது எந்த நாட்டுப் பாஷை என்று.

எனக்குத் தெரியும் நேற்று ஞாயிற்றுக் கிழமை உங்கள் கணவரிடம் கொம்பியூட்டருக்கு சண்டைபோட்டு, தோத்துக் கழைத்திருப்பீங்கள். இன்று வரலாம்தானே? உடல் இன்னும் நலமில்லையா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா!...உடல்நிலை பரவாயில்லை. கீரை வறை என்றால் கீரை பொரியல் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். சரிதானே. அதிரா!.. நீங்க எல்லா லாங்க்வேஜிம் கலந்து பேசுவது அழகாக இருக்கு. எங்களுக்கும் புதுப்புது வார்த்தைகள் கற்றுக்கொண்ட திருப்தி!!

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மிளகு இடியாப்பத்தின் படம்:
<br />
<img src="files/pictures/pepper_sevai.jpg" alt="Pepper idiyappam" />

மாலதியக்கா, எனக்கும் இதுக்கும்தான் பொருத்தம் போல இருக்கு. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குப் பின்னும், நான் தான் பின்னூட்டம் அனுப்புகிறேன். ஆனால் இடையில் அடிக்கடி நான் செய்வதுண்டு. இடியப்பம் அவிக்கும்போது செய்துகொள்வேன். மிகவும் சுவையாக இருக்கும். இன்றும் இரவுக்காகச் செய்திருக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா..!! மிளகு இடியாப்பத்தின் படம் பார்த்தேன். நல்ல கலர்ஃபுல் - ஆக இருக்கு. நான் காய்ந்தமிளகாயை இரண்டாக கிள்ளிப்போடுவேன். நீங்க ஒன்றிரண்டாக அரைத்துப்போட்டு இருக்கிறீர்கள் போலும். படத்தில் சின்னச்சின்ன பீஸாக தெரிகிறது. இடியாப்பம் செய்து பார்த்து சுவைத்து படமும் அனுப்பியதற்கு நன்றி....!!

அதிரா படம் பார்த்து ஜொல்லு விட்டு செய்து சாப்பிட்டாச்சு.முட்டை சேர்த்து தான் செய்து பழக்கம்.இது மிகவும் வித்தியாசமாக இருந்தது.அருமை.மாலதியக்கா நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.