உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தக்காளி சட்னி - ஈசி முறை

 


தேவையானப் பொருட்கள்

  • தக்காளி - 3 (நன்கு பழுத்தது)
  • தேங்காய் - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 4
  • சின்ன வெங்காயம் - 10
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • தனியா தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி - அலங்கரிக்க
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • சோம்பு - தாளிக்க

செய்முறை

  • தக்காளியையும் தேங்காயையும் நன்கு அரைத்து தனியாக வைக்கவும்.
  • வெங்காயம் பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றவும் .
  • அதில் மிளகாய் தூள்,தனியா தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு போட்டு தேவையான தண்ணீர் விடவும்.
  • 3 விசில் வரும் வரை வேக விடவும்.
  • கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும் .

குறிப்பு:

சின்ன வெங்காயமோ பெரிய வெங்காயமோ நீள நீளமாக நறுக்க வேண்டும்.

வழங்கியவர்

RSMV

random food image


comments