தேவையான பொருட்கள்
- மீன் - 1/2 கிலோ
- இஞ்சி - 1.5 இன்ச் துண்டு
- பூண்டு - 8 பல்
- குருமிளகு - 1.5 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 2
- ஜீரகம் - 1/4 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தே.அ
- எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 5 இலை
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- எண்ணை பொரிக்க - 1/4 கப்
|
செய்முறை
- இப்பொழுது மீன் ,கறிவேப்பிலை தவிற மற்றவைகளை மிக்சியிலோ அம்மியிலோ இட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் கறிவேப்பிலை சேர்த்து இன்னொரு சுற்று சுற்றவும்..கறிவேப்பிலை ஒன்றிரண்டாக அரைந்தால் தான் சுவை தரும்.
- பின் அரைத்த மசாலாவை மீனில் தடவி 3 மணிநேரம் ஊறவிடவும்
- பின் எண்ணையை காயவைத்து மீன் துண்டுகளை பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்
|
குறிப்பு:
எல்லா மீனுக்கும் இப்படி வறுத்தால் சூப்பராக இருக்கும்.குறிப்பாக மசாலா பிடிக்காத வகை மீன்களுக்கு இப்படி சேர்த்தால் தான் சுவை தரும்.நல்ல வெஜிடபுள் ஃப்ரயிட் ரைஸ்,மீன் வறுவல்,வெங்காய சேலட் வைத்தால் சூப்பர் காம்பினேஷன்.
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -