பைனாப்பில்-செர்ர்ரி குஜியா

தேதி: January 31, 2008

பரிமாறும் அளவு: 15

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா 1/2 கப்
பைனாப்பிள் 2 டேபிள்ஸ்பூன்
செர்ர்ரி 2 டேபிள்ஸ்பூன்
கோயா 150 கிராம்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரி 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், 1/2 கப் போரிக்க


 

மைதாவை பூரிக்கு மாவு பிசைவது போல் தண்ணீர் விட்டு , 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கோயாவை சேர்த்து வதக்கவும்.

1 நிமிடம் கழித்து, பைனாப்பிள், செர்ரி சேர்த்து வதக்கவும்.

அதனுடன், உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரி செர்த்து, கிளறி, பின்னர் சர்க்கரை சேர்த்து, இறக்கி வைக்கவும்.

ரொம்ப உலர்ந்து விடக்கூடாது.

பின்னர், மைதா மாவை உருண்டைகளாக்கி, பூரி போல் இடவும்.

அந்த பூரிக்கு நடுவில் இந்த பழக்கலவையை வைத்து நன்றாக மூடி, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


இது என்னுடைய ரெசிபி இல்லை. தொலைக்காட்சியில் பார்த்தேன். வீட்டில் ட்ரை செய்து பார்த்தேன், எல்லோருக்கும் பிடித்து இருந்தது, முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த ப்ரூட் கொழுக்கட்டை மிகவும் பிடித்திருந்தது. உங்களுடன் இந்த ரெசிபியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

மேலும் சில குறிப்புகள்