சிக்கன் குழம்பு

தேதி: January 31, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 500 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 20 பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
சிக்கன் மசாலா - 50 கிராம்
வரமிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சற்று நேரம் ஆற விட்டு பின் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை கோழிக்கறியுடன் கலந்து, மூன்று கப் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் வெந்து கொண்டிருக்கும் கலவையுடன் சிக்கன் மசாலா, வரமிளகாய் பொடி இவைகளையும் சேர்க்கவும். பின் 15 நிமிடம் கொதிக்க விட்டு, கறி வெந்து, கெட்டியாக குழம்பு பதம் வந்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்திரா இன்று உங்கள் சிக்கின் குழம்பு செய்தேன். சாதத்திற்கு
நன்றாக இருந்தது. செய்வது அவ்வளவு கஷ்டம் இல்லை. வித்தியாசமான
சுவை நன்று
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.