பெங்காலி தம் ஆலு

தேதி: January 31, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு (baby) - 1 கிலோ
மஞ்சள் பொடி 1 - ஸ்பூன்
எண்ணெய் - 1 குவளை
பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 ஸ்பூன்
பூண்டு - 1 ஸ்பூன்
மிளகாய் - 4


 

உருளைக்கிழங்கைத் தவிர மற்ற அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் தோலுரித்து குச்சியால் லேசாக துளை ஓட்டை போட வேண்டும்.
ஒரு தட்டில் இதை கொட்டி சிறிது மஞ்சள் போட்டு, சிறிது மிளகாய் பொடி தூவி, தனியா, கிராம்பு, மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதன் மீது கொட்டி பரப்ப வேண்டும்.
பின்னர் அடுப்பின் மீது வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உருளைக்கிழங்கு போடவேண்டும்.
கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்ததும், ஏலக்காய் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் பெங்காலி தமி ஆலு தயார்.
இதை சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடனும் பரிமாறலாம்


மேலும் சில குறிப்புகள்


Comments

இங்கே ஃபிங்கர்லிங் உருளை கிழங்கு கிடைத்தது... ரொம்ப வித்யாசமான சுவையுடன் இருந்தது.. சப்பாத்திக்கும், சாதம்/ரசத்துக்கும் நல்ல பக்க உணவாக இருந்தது. உங்கள் குறிப்புக்கு நன்றி

"தேடலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுமே வாழ்க்கை! "

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க நன்றி இலா!