www.arusuvai.com
பெங்காலி தம் ஆலு
தேவையானப் பொருட்கள்
- உருளைகிழங்கு (baby) - 1 கிலோ.
- மஞ்சள் பொடி 1- ஸ்பூன்.
- எண்ணெய் - 1 குவளை.
- பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு , கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவையான அளவு.
- மிளகு - 1 ஸ்பூன்.
- தனியா - 1 ஸ்பூன்.
- இஞ்சி - 1 ஸ்பூன்.
- பூண்டு - 1 ஸ்பூன்.
- மிளகாய் - 4
செய்முறை
- உருளைக்கிழங்கைத் தவிர மற்ற அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
- உருளைகிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் தோலுரித்து குச்சியால் லேசாக துளை ஓட்டை போட வேண்டும்.
-
- ஒரு தட்டில் இதை கொட்டி சிறிது மஞ்சள் போட்டு, சிறிது மிளகாய்ப் பொடி தூவி, தனியா, கிராம்பு, மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதன் மீது கொட்டி பரப்ப வேண்டும்.
-
- பின்னர் அடுப்பின் மீது வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உருளைகிழங்கு போடவேண்டும்.
-
- கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்ததும், ஏலக்காய் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் பெங்காலி தமி ஆலு தயார்.
-
- இதை சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடனும் பரிமாறலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
10 நிமிடம் |
15 நிமிடம் |