சிக்கன் சூப் (சளிக்கு)

தேதி: February 1, 2008

பரிமாறும் அளவு: 2 kids

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - நான்கு துண்டு எலும்புடன்
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
கரம் மாசாலா தூள் - கால் தேக்கரண்டி


 

சிக்கனை கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு (வெங்காயம் பொடியாக நறுக்கி போடவும், தக்காளியை நல்ல பிழிந்து விடவும்) மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நல்ல ஆறு விசில் விட்டு இறக்கவும்.
வெந்ததும் வடிக்கட்டி அதை சூடான சாதத்தில் பிசைந்து கொடுக்கவும். இல்லை உங்கள் குழந்தை குடித்தால் அப்படியே குடிக்க கொடுங்கள்.


இந்த சிக்கன் சூப்பை தொடர்ந்து கொடுத்தால் கண்டிப்பாக சளியை கட்டுப்படுத்தும் எல்லோரும் குடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இரண்டு நாள் முன்பு மாலை நேரத்தில் செய்தேன்.... எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி. இதுவரை எங்கு விடுதியில் சாப்பிட்டாலும் இதில் தான் ஆரம்பிப்பேன், எனக்கு செய்ய தெரியாது. கற்றுக்கொண்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஜலீலா மேடம்,

நேற்று உங்களுடைய சிக்கன் சூப் செய்து பார்த்தேன். சுவை மிக ஆபாரம். We had this type of taste in restaurant only. first time we had at home. My husband also appreciated. Thanks for giving this receipe.

Leela Nandakumar

Leela Nandakumar

Thanks Jalila akka. I tried it today, it was delicious. On top of ur recipe, i added lemon juice one teaspoon.

அன்பு துளசி

சிக்கன் சூப் செய்து மறக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

1. இது பிள்ளை பெற்றவர்களுக்கு, குளிக்கவைக்கும் அன்று கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடிக்காது.

2. கேன்சர் நோயாளிகளுக்கு ஆப்ரேஷ்ன் முடிந்ததும் இதை தினம் செய்து கொடுத்தால் சீக்கிரம் தெம்பாகிவிடுவார்கள்.

3. அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இதை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டால் சளிதொல்லக்கு குட்பை சொல்லலாம்.

இபப் தான் ஒரு வாரமா அருசுவை ஓப்பன் ஆகுது,
\
ஆனால் என்னால் மறு படி கலந்துக்க முடியாது, ஊருக்கு போகிறேன்.எல்லோருக்கும் பை,

Jaleelakamal

டியர் வனிதா, லீலா இபப் தான் உங்கள் பின்னூட்டங்களை பார்க்கிறேன்.
ரொம்ப நன்றி, மறக்காமல் பதிவு போட்டதற்கு.

வனிதா ஊருக்கு போகிறேன், காணமல் போனவர் பக்கத்தில் இதை சேர்த்து விடுங்கள். பை.

Jaleelakamal

hai jaleela akka
eppadi irukkinga inda soup en 8 month babykku kudukkalamaa?
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL