சிம்பிள் சிக்கன் வறுவல்

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோழிக்கறி - 1/2 கிலோ,
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கோழியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, கழுவி வைக்கவும்.
கோழிக்கறியுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் இறக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும், வேக வைத்த சிக்கனை கொட்டி, தண்ணீர் சுண்டி, வறுவலாக வரும் வரை வறுத்து இறக்கவும்.


எங்க ஊர்ல மிளகாயை கிள்ளி தாளித்தும் இதை செய்வார்கள். சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள கோழியின் ஒரிஜினல் சுவை மாறாமல், நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்குங்க உங்க குறிப்புகள். வித விதம்மா என் ரசனைக்கு ஏர்தாப்பல காரமா.... :) தினம் நிறைய. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
பாராட்டுக்கு நன்றி. அப்ப நம்ம 2 பேரோட ரசனையும் 1 போல :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.