சிக்கன் கோலா

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பில்லாத கோழிக்கறி - 1/4 கிலோ,
முட்டை மஞ்சள் கரு - 1,
கார்ன்ஃபிளார் மாவு - 4 மேசைக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி,
கிரீம் - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான் அளவு.


 

கோழியை சுத்தம் செய்து, மிக்ஸியில் அரைக்கவும்.
எண்ணெய் தவிர மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்க்கு பதிலாக நெய்யில் பொரித்தால், இன்னும் சுவையாக இருக்கும்.
சாஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும். மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஞ்சள் கருத்தான் சேர்க்க வேண்டுமா?

அன்பு ஃபரீதா,
ஆமாம்ப்பா, இதில் மஞ்சள் கரு மட்டும் தான் சேர்க்கணும். அப்பத்தான் நல்லாயிருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா என்ன இங்கே உட்கார்ந்து இருக்கீங்க?சமத்தா போய் ரெஸ்ட் எடுத்துகோங்க.நல்லா சரியானதும் பதிவுகள் போட்டால் போதும்.

அன்பான உரிமையுடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவி,
இதோ போய்ட்டேன்ப்பா, அவர் சொன்னார், உன்னைக் காணோம்னு பதிவு இருக்குன்னு. அதுக்கு பதில் போடவும், தீபாவளி வாழ்த்து சொல்லவுமே வந்தேன். இனி வரலை. போன் பண்ணி அவர்கிட்ட மாட்டி விட்டுடாதே. திட்டுவார்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உடனே பதில் தந்ததிற்க்கு மிக நன்றி.