உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

புரூட் சாலட் இன் கஸ்டர்ட்

 

ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகளுகு ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜெல்லி,புரூட் சாலட் என்றால் சாப்பாடே தேவையில்லை இதே வயறு நிரம்பிவிடும்.நான் இதை நோன்பு காலங்களில் அடிக்கடி செய்வேன்.

தேவையானப் பொருட்கள்

  • பால் - நான்கு கப்
  • மிக்ஸ்ட் புரூட்ஸ் - இரண்டு கப்
  • ஆப்பில்,பைனாப்பில்,ஸ்ராபெர்ரி,மாம்பழம்,வாழைபழம், கருப்பு திராட்சை
  • பாதம் - ஐந்து
  • கஸ்டர்ட் பவுடர் - ஒரு மேசை கரண்டி
  • கண்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி
  • சர்க்கரை - தேவைக்கு
  • குங்குமபூ - நால் இதழ்
  • ஜெல்லி - ஒரு கப்
  • ஐஸ்கிரீம் - தேவைகு

செய்முறை

  • முதலில் பாலை நன்கு காய்ச்சவும்.
  • ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆறவைத்து அதில் கண்டெஸ்ட் பவுடரை கலக்கவும்.
  • சூடானா பாலில் கலக்கினால் கொத கொத என் ஆகிவிடும்.
  • கலக்கியதை சூடானா பாலில் சாப்ரானையும் போட்டு(குங்கும பூ) கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சனும்.
  • அப்படியே கட்டி யாகி கொண்டே வரும்.
  • கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதால்.சிறிது சர்க்கரை சேர்த்தால் போதும்.
  • இந்த கட்டியாக காய்ச்சியதை நல்ல ஆறவிடனும்.
  • அதற்குள் பாதத்தை வெண்ணீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக கட் பன்ன்வும்.
  • இப்போது பாதம் கடென்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும்.
  • ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும்.
  • பழங்களை ஒரே சீராக பொடியாக கட் பண்ணவும்.
  • ரெடிமேட் ஜெல்லி வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை வீட்டிலேயே செய்யலாம்.
  • ஐஸ்கிரிம் ஏதாவது பிளேவரில் அதையும் வைத்து கொள்ளுங்கள்.
  • குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முதலில் காய்ச்சிய கட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய
  • குழிகரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழகலவை, ஒரு ஸ்க்யுப் ஐஸ்கிரிம், கொஞ்சமா ஜெல்லி வைத்து பறிமாறவும்.
  • ஒன்றும் மிஞ்சாது.

குறிப்பு:

சில பேர் பழத்தை போட்டு கலந்தே வைத்து விடுவார்கள் அது கருத்து போய்விடும் அப்ப அப்ப கல்ல்கினால் தான் பிரெஷாக சாப்பிட நல இருக்கும். மெயினாக குழந்தைகளுக்கு ரொமப் பிடிக்கும். உங்க இழடம் எநத பழம் வேண்டுமானாலும் சேர்த்து பூந்து விளையாடுங்க. சாப்பிட்டு ஸைனிங்க ஆகுங்க.

வழங்கியவர்

ஜலீலா

random food image


comments
ஜலீலாக்கா
பிப்ரவரி 10, 2008 - 5:56am - வழங்கியவர் thalika

ஜலீலாக்கா நான் செய்யும்பொழுது மாம்பழம்,சீட்லெஸ் க்ரேப்ஸ்,ஆப்பில் ,ஜெல்லி மட்டும் சேர்ப்பேன்..
ஏனோ எனக்கு இந்த வாட்டெர் மெலோன் சேத்தினா பிடிக்கிரதே இல்லை...காக்ரோ ச் ச்மெல் வருது

தளிக்கா வாட்டர் மெலன்
பிப்ரவரி 10, 2008 - 5:58am - வழங்கியவர் Jaleela Banu

தளிக்கா வாட்டர் மெலன் சேர்க்க கூடாது தண்ணீர் விட்டு விடும்.
ஜலீலா

சங்கீதா சில்லுன்னு
மே 7, 2008 - 1:01am - வழங்கியவர் Jaleela Banu

இந்தாங்க சங்கீதா சில்லுன்னு ஒரு ரெஸிபி

ஜாமாயிங்கோ
ஜலீலா