தேவையான பொருட்கள்
- சாதம் - 3 பேருக்கு தேவையான அளவு
- சின்ன வெங்காயம் - 8 மிகவும் பொடியாக நறுக்கியது
- தயிர் - 1 கப்
- உப்பு தே.அ
- தாளிக்க
- ========
- தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கடலை,உழுந்து பருப்பு - இரண்டும் 1/2 ஸ்பூன்
- வரமிளகாய் - 3
- இஞ்சி - நீளமாக நறுக்கியது - 1/2 இன்ச் துண்டு
- கறிவேப்பிலை - 10 இலைகள்
|
செய்முறை
- சாதத்தில் வெங்காயம் தயிர் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாய் தாளித்து கலந்து வைத்த சாதத்தில் கொட்டி பரிமாறவும்
|
குறிப்பு:
வெங்காயம் மிகப் பொடியாக நறுக்கிப் போடுங்கள்...பொதுவாக வெங்காயத்தையும் சேர்த்து தாளிப்போம்.இம்முறையில் செய்தாலும் மிகவும் சுவையாக இடையிடையே கருகருக்கென வெங்காயமும் கடிக்க சூப்பராக இருக்கும்.மிதிய உணவிற்கு கொண்டு போவதாக இருந்தால் 1/2 கப் தயிரும் 1/ கப் பாலும் சேர்த்து செய்து எடுத்து வைய்யுங்கள் மதியத்திற்கு சரியாக இருக்கும்.இல்லையென்றால் புளிப்பு கூடிவிடும்.
ஊறுகாய்,அப்பளம் இதனுடன் இருந்தால் வேறென்ன வேண்டும் அவ்வளவு ருசியாச்சே
வழங்கியவர்
தளிகா
சமீபத்தியக் கருத்துக்கள்
18 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
43 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -