பனீர் உருளை மசாலா

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் -- 10 துண்டுகள்
உருளை -- 1 என்னம் (தோலுரித்து நறுக்கியது)
பட்டாணி -- 1/2 கப்
கேரட் -- 1 என்னம் (தோலைநீக்கி வெட்டியது)
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 3 என்னம்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- 2 ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் -- 1/2 மூடி
பச்சைமிளகாய் -- 3 என்னம்
சோம்பு -- 1 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.
அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
பின் அரைக்கவுள்ளவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.
சூப்பரான பனீர் உருளை மசாலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹெலோ சுபா வெல்கம் டு த நியூ சர்வர்

ரூபி,
ரொம்ப நன்றி...
நீங்களும் உங்களது சேவையும் இந்த புதிய சர்வருக்கும் தேவை..
உங்களையும் வருக வருக என வரவேற்கிறேன்...

Hi Subha,

இன்று இந்த மசாலா செய்தேன் நன்றாக இருந்தது.நான் இதை ஹோடலில் கூட சாப்பிட்டது கிடையாது ஆனால் சுவையாய் இருந்தது.பார்க எப்படி இருக்கும்னு கொஞ்சம் படம் போட்டீங்கனா,நான் செய்தது சரியான பதமான்னு சரிபார்க உதவும்.உங்களின் அனைத்து recipeயும் செய்வதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருக்கிறது.பாராட்டுக்கள்.

best regards,
Anuradha.

Be the best of what you are and the Best will come to you :)

இதற்கு தக்காளி, வெங்காயம் எவ்வளவு என்று குறிப்பிடுங்கள் Pls.. உங்கள் கை சரியானதும் பதிலளியுங்கள்.

சாரதா ஒரு வெங்காயமும், பெரிய தக்காலி ஒன்றும் போடுங்கள் இல்லை டொமேட்டோ பேஸ்ட் இருந்தாலும் கால் கப் போடலாம்.
என்ன ஆயிற்று சுபாவிற்கு கை வலியா.

Jaleelakamal

ஜலீலாக்கா

தேங்க்ஸ் நீங்கள் பதிலிட்டதற்கு, அவர்களுக்கு உடைந்த க்ளாஸ் பீஸ் குத்தி தையல் போடும்படி ஆகிவிட்டதாய் ஒரு பதிவில் பார்த்தேன்.

சுபா,என்ன இது,இப்படி கையை கிழித்துக்கொண்டு தையல் போடுகிற அளவிற்க்கு, கவனம் வேண்டாமா?தண்ணீர் சில தினங்களுக்கு கைய்யில் படாமல் பார்த்துக்கொளுங்கள்.
இங்கு நாங்கள் பன்னீர் சாப்பிடுவது இல்லை சுபா,அதனால்.நீங்கள் சொன்ன உருளை,கேரட்,மட்டும் போட்டு செய்யலாம் தானே?