உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறி

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 6,
தக்காளி - 2,
சோம்பு - 1 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 1 மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் - 2 கப்,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.


 

உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்தவுடன், தேங்காய்ப் பாலை ஊற்றி, திக்காக வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.


சூடான சாதத்திற்கும், தோசைக்கு, குஸ்கா, புலாவ் போன்றவற்றிற்கு பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விக்கா இது சாப்பாத்திக்கு செய்தேன்.சூப்பர் ஆனால் காரம் அதிகமா இருந்தது..இத்தனைக்கும் 3 மிளகா போட்டு கம்மியாதான் தூள் போட்டேன்.ஆனால் சுவை சூப்பர் வெறும் குழம்பா சாப்பிட்டேன்....
போட்டோ எடுத்தேன்.கடைசி நாள்தான் மொத்தமா அனுப்புவேன்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணு,
பாராட்டுக்கு நன்றி. பச்சை மிளகாய் ரொம்ப காரமான மிளகாயாக இருந்திருக்கும். (காரம் அதிகம்னு சொல்லிட்டு எதுக்கு வெறும் குழம்பாவே சாப்பிட்டே? :-) )
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனக்கு காரம் என்றால் விரும்பி சாப்பிடுவேன்..ஆனால் திருமனத்திற்க்கு காரம் போட்டால் சன்டைதான் வீட்டில்.நான் சிறு வயதில் இருந்து காரம் சாப்பிட்டதால் எனக்கு காரம் தெரியாது,நான் காரமே இல்லை என்பேன்.என்னவர் காரம் அதிகம் என்பார்..இது எங்கே போய் முடியும் நீங்களே யோசிங்க...காரம் குறைத்து சமைத்து பழ்கிடுச்சு.இப்ப காரமா சாப்பிடவே முடியல..ஆனால் குழம்பு சாப்பிட்டு 4 டம்ளர்தண்ணி 6 ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டது தனி கதை

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

Dear Senthamiz Madam, Geetha from Kuwait. Today i tried this receipe. But i added Green peas also. It's So nice. My Younger sister Jamunarani is in Pondy Venkata Nagar 2nd Cross. I'm going to try all your receipies one by one. Your Tamil typing is very nice. I will try to learn Tamil typing.thanks!

அன்பு கீதா,
பாராட்டுக்கு மிக்க நன்றி. பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.
அப்படியா! அப்ப இந்தியா வரும் போது பாண்டி வருவீங்க தானே. அப்படியே எங்க வீட்டுக்கும் வரவும். அவங்களும் அறுசுவை பார்ப்பாங்களா? போன் நெம்பர் தெரிந்தால் பேசலாம். ரொம்ப நல்ல முயற்சி, செய்து பார்.
தமிழ் பெரிய விஷயம் இல்லை. எகலப்பை டவுன்லோடு செய்துகிட்டா ரொம்ப சுலபம். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Dear Senthamizh Madam,
Definitely i will come to your house when we come to Pondy. I will contact you before come to India. My sister doesn't have pc in the house.
So, i tell your receipies through the phone only.
Thanks for your immediate reply. with Love Geetha.

Dear Senthamizh Madam,
How are you? I like Hotel Sambar Vada very much.
I want to know how to prepare sambar and Vada in Hotel taste. If you know that recipe please tell me. Thanks and regards,
Geethalakshmi from Kuwait.

அன்பு கீதா,
லின்க் கொடுத்துட்டேன்ப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.