உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை குருமா

 


தேவையானப் பொருட்கள்

  • வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்,
  • உருளைக்கிழங்கு -3,
  • பெரிய வெங்காயம் - 2,
  • காய்ந்த மிளகாய் - 6,
  • சீரகம் - 1தேக்கரண்டி,
  • தனியா - 1 மேசைக்கரண்டி,
  • தேங்காய் துருவல் - 1/2 கப்,
  • புளி - 1 கோலிகுண்டு அளவு,
  • பூண்டு -4 பல்,
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 10,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்.
  • உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
  • அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • வேக வைத்த கொண்டைக்கடலையுடன், உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.
  • 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்திற்கும், தோசைக்கும் பொருந்தும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 8 மணி நேரம் 20 நிமிடங்கள்.
  random food image


comments