தேவையானப் பொருட்கள்
- வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்,
- உருளைக்கிழங்கு -3,
- பெரிய வெங்காயம் - 2,
- காய்ந்த மிளகாய் - 6,
- சீரகம் - 1தேக்கரண்டி,
- தனியா - 1 மேசைக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 1/2 கப்,
- புளி - 1 கோலிகுண்டு அளவு,
- பூண்டு -4 பல்,
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்.
- உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
- அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- வேக வைத்த கொண்டைக்கடலையுடன், உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- உருளைக்கிழங்கு வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.
- 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
குறிப்பு
சூடான சாதத்திற்கும், தோசைக்கும் பொருந்தும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
8 மணி நேரம் |
20 நிமிடங்கள். |