கோபி குருமா

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃப்ளவர் - 1
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இனிப்பு தயிர் - அரை கப்
மாங்காய் சாறு - ஒரு கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முந்திரிப்பருப்பு, கசகசா, மிளகு மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வெங்காயத்தை மைய அரைத்துக் கொள்ளவும். மற்றொன்றை வட்டவடிவில் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கின் தோலுரித்து சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரையும் சுத்தம் செய்து சிறு பூக்களாக உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வேகவைத்து எண்ணெய் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் வெங்காயத் துண்டுகள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் தண்ணீர் வற்றியதும் தயிரினை நன்கு அடித்து பிறகு ஊற்றவும்.
தேவையான அளவு உப்புச் சேர்த்து நெய் மிதக்கும் வரையில் வேகவிடவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்தவுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போடவும்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அதில் புளிப்பு மாங்காய் சாற்றினை ஊற்றி தீயைக் குறைத்து குருமா கெட்டியாகும் வரை வேகவிடவும்.


மேலும் சில குறிப்புகள்