உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பச்சை மொச்சை, வாழைக்காய் குருமா

 


தேவையானப் பொருட்கள்

  • பச்சை மொச்சை - 1 கப்,
  • வாழைக்காய் - 1,
  • பெரிய வெங்காயம் - 2,
  • காய்ந்த மிளகாய் - 6,
  • சீரகம் - 1தேக்கரண்டி,
  • தனியா - 1 மேசைக்கரண்டி,
  • தேங்காய் துருவல் - 1/2 கப்,
  • புளி - 1 கோலிகுண்டு அளவு,
  • பூண்டு -4 பல்,
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 10,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • மொச்சையை 2 மணி நேரம் ஊற வைத்து தோலை பிதுக்கி பருப்பை மட்டும் எடுக்கவும்.
  • வாழைக்காயை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
  • அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • மொச்சை, வாழைக்காய், அரைத்த விழுது, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • மொச்சை, வாழைக்காய் வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.
  • உப்பு சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும்.

குறிப்பு:

சாதத்திற்கு கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். வாழைக்காய்க்கு பதிலாக மஞ்சள் பூசணியும் சேர்க்கலாம்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 2 மணி நேரம் 20 நிமிடங்கள்.
  random food image


comments