தேவையானப் பொருட்கள்
- பச்சை மொச்சை - 1 கப்,
- வாழைக்காய் - 1,
- பெரிய வெங்காயம் - 2,
- காய்ந்த மிளகாய் - 6,
- சீரகம் - 1தேக்கரண்டி,
- தனியா - 1 மேசைக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 1/2 கப்,
- புளி - 1 கோலிகுண்டு அளவு,
- பூண்டு -4 பல்,
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- மொச்சையை 2 மணி நேரம் ஊற வைத்து தோலை பிதுக்கி பருப்பை மட்டும் எடுக்கவும்.
- வாழைக்காயை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
- அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- மொச்சை, வாழைக்காய், அரைத்த விழுது, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- மொச்சை, வாழைக்காய் வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.
- உப்பு சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும்.
குறிப்பு
சாதத்திற்கு கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். வாழைக்காய்க்கு பதிலாக மஞ்சள் பூசணியும் சேர்க்கலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
2 மணி நேரம் |
20 நிமிடங்கள். |