குஷ்பூ இட்லி

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (20 votes)

 

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்,
பச்சரிசி - 2 டம்ளர்,
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்,
சின்ன ஜவ்வரிசி - 1 டம்ளர்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
கொட்டை முத்து - 5 (ஆமணக்கு விதை),
உப்பு - தேவையான அளவு.


 

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, கொட்டைமுத்து, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைத்து எடுத்த பின் ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நைசாக அரைக்கவும்.
உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த பின் இட்லியாக ஊற்றவும்.


தோசைக்கென்று தனியாக அரைக்க வேண்டியதில்லை. தக்காளி சாம்பாருடன் சாப்பிட எத்தனை சாப்பிட்டோம்னே தெரியாது. இதையே தோசைக்கும் உபயோகிக்கலாம். முறுகலாக வராது. மெத்தென்று பூப்போல வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

குஷ்பு இட்லி சுமாராக இருந்தது. உளுத்தம்பருப்பு அளவு அதிகம்.

All is well

செல்வி அக்கா குஷ்பு இட்லி நீங்க கொடுத்திருக்கிற proportions அப்படியே போட்டு செய்தேன் ரொம்ப நல்லா வந்தது தக்காளி குருமா உடன் சாப்பிட சாப்பிட இன்னும் ஒன்று கூட சப்பிடலாம்னு இருந்தது குறிப்புக்கு ரொம்ப நன்றி அக்கா

ponni

செல்வியக்கா ஒரு முறை எங்கம்மா அந்த கருப்பு மணி போன்ற விதைக்ளை போட்டு செஞ்சாங்க..சொன்னது ரொம்ம்ப சரி..இட்லி உள்ள போரதே தெரியரதில்ல..அவ்வளவு மிருதுவாக இருக்குது..அப்பப்பா சாப்பிடனும் போல இருக்கு

செல்வி!....உங்க குறிப்பில் இந்த இட்லியை இப்பதான் படித்தேன். ஆமணக்கு விதை எங்கு கிடைக்கும்? இந்த ஆமணக்கு விதை சேர்ப்பதால் குழந்தைகளுக்கு வயிற்றுக்கு ஒன்றும் பண்ணாது அல்லவா? உங்களுடைய வித, வித, விதமான குறிப்புகளையெல்லம் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறேன்.

அன்பு சகோதரி மாலதி,
ஆமணக்கு விதை எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை சில இடங்களில் கொட்டை முத்து என்பர். இது விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தும் பருப்பு.
கருப்பு/ பிரவுன் கலரில் இருக்கும்.இதன் மேல் தோல் கெட்டியாக இருக்கும். அதை தட்டி உரித்தால் உள்ளே வெள்ளையாக பருப்பு இருக்கும். அதைத்தான் சேர்த்து அரைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஒன்றும் செய்யாது. நமக்குமே உடல் சூட்டை தணிக்கும். குறிப்புகளை பார்த்து சொல்லுங்கள் குறைநிறைகளை. மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

குஷ்பு இட்லி
செல்வி மேடம் இதில் ஜவ்வரிசி ஒரு டம்ளரா போடனும்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள செல்வி!

உங்களின் குஷ்பூ இட்லியைச் செய்தேன். கொட்டைமுத்து இல்லாமல்தான் செய்ய முடிந்தது. மிருதுவாக வந்தது. ஆனால் சற்று அமுங்கி வந்தது. மாவை நன்கு கெட்டியாக கரைத்தால் அமுங்காது என்று நினைக்கிறேன். அல்லது அரிசி வகைகள் இங்கு வேறுபடுவதால் இப்படி இருக்கிறதோ என்னவோ? ஊருக்கு வரும்போது மறுபடியும் செய்து பார்க்க வேண்டும்.

அன்பு சகோதரி மனோ,
கொட்டைமுத்து சேர்த்தால் பஞ்சு போல் வரும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். ஒருவேளை அரிசியும் வித்தியாசமாக இருக்கலாம். எங்க ஊர் பக்கம் இது வெகு பிரபலம். வெள்ளை வெளேரென்று குண்டா பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.
ஊருக்கு வரும் போது செய்து பாருங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா குஷ்பு இட்லியில் சின்ன ஜவ்வரிசி ஒரு டம்ளாரா போடனும்.
ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலா,
முன்னமேயேயும் கேட்டிருக்கீங்க. நான் தான் கவனிக்கலை. மன்னிக்கவும்.
ஒன்று என்பது முக்கால் வரை போடலாம். உளுந்து நல்லா மாவு காணும் உளுந்து என்றால் கொஞ்சம் குறைத்து போடுங்கள். மனோ மேடம் கொஞ்சம் அமுங்கி விட்டதுன்னு சொன்னாங்க. அந்த அரிசிக்கு(மாவு காணாது போல) கொஞ்சம் குறைத்து போட்டால் சரிவரும்னு நினைக்கிறேன். முயற்சித்து அவங்க சந்தேகத்துக்கும் சேர்த்து சொல்லுங்கப்பா. முக்கால் டம்ளராக போட்டு பாருங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி ஆண்டி,
ஆமாணுக்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன?குஷ்பூ
இட்லி சாப்பிட ஆசையக இருக்கு.

ஆமணக்கு விதை-castor bean
ஆமணக்கு எண்ணெய்-விளக்கெண்ணெய்-castor oil

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கீதா,
நலமா? கெட் டு கெதரில் உங்க தம்பியும், ஃபிரண்டும் பார்த்தேன். ரொம்ப நேரம் அவங்க சுஹைனா கூட வந்தவங்கன்னு நினைச்சுட்டேன். பிறகு தெரிஞ்சப்பறம் கஷ்டமா இருந்துச்சு பேச. கவி(சிவா) சொன்னது சரிதான்.ஆமணக்கு விதை தான் அது. கேஸ்டர் ஆயில் எடுப்பாங்க. சரியான பக்குவத்தில் செய்து ஒருமுறை சாப்பிட்டா, சாதா இட்லியே செய்ய மாட்டீங்க.
நன்றி கவி,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மிகவும் நன்றி செல்வி ஆண்டி. கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன்.
நன்றி கவி.

கீதா ஆச்சல்

செய்து பார்த்து விட்டு விளக்கமாக பதில் எழுதுகிறேன்.

பூங்கோதை தங்கவேல்மாணிக்கதேவர்

செல்வி அம்மா குஷ்பூ இட்லி செய்து பார்த்தேன். இட்லி, தோசை இரண்டிலுமே நன்றாக இருந்தது. இட்லி எவ்வளவு உள்ள போச்சுன்னே தெரியலை. அவ்வளவு சுவை, மிருது. மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அன்பு சுபா,
இந்த இட்லி ரொம்ப நல்லா இரரக்கும். தக்காளி குருமாவும் , இந்த இட்லியும் இருந்ததுன்னா எவ்வளவு சாப்பிடறோம்னே தெரியாது. நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.