மட்டன் பச்சை மசாலா

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கறி - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி.
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 தேக்கரண்டி.

அரைக்க:
-----------
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1துண்டு,
பூண்டு - 4 பல்,
கொத்தமல்லி - 1 கைப்பிடி.

வதக்கி அரைக்க:
---------------------
தேங்காய் துருவல் - 1/2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.ஆட்டுக்கறியைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து மட்டனில் பிசிறி 15 நிமிடம் வைக்கவும். வதக்கி அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வதக்கி அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் ஊற வைத்த மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.
கறி நன்கு வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
கறி வெந்ததும், வதக்கி அரைத்த மசாலா சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.


சாதத்தில் கலந்து சாப்பிட, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Thanks for the receipe madam, we tried it and it tasted nice and different.planning to try in chicken soon.

Thyagu

சிக்கனில் செய்யும் எண்ணம் புதிதாகவுள்ளது. நானும் முயற்சி செய்கிறேன். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.