ஆந்திரா நல்லி எலும்பு கறி

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ஆட்டு நல்லி எலும்பு - 15,
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ,
தக்காளி - 5,
தயிர் - 1/2 கப்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி,
கரம் மசாலா - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி - 1 கைப்பிடி.

தாளிக்க:-
========
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 5,
ஏலக்காய் - 4,
பிரிஞ்சி இலை - 2,


 

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறி சேர்த்து வதக்கவும்.
கறி நன்கு வதங்கியதும் உப்பு, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 10,12 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.
ஆறியதும் திறந்து தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து தக்காளி நன்கு வெந்து, எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சாதத்தில் கலந்து சாப்பிட, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்