தேவையானப் பொருட்கள்
- ஆட்டு நல்லி எலும்பு - 15,
- பெரிய வெங்காயம் - 1/2 கிலோ,
- தக்காளி - 5,
- தயிர் - 1/2 கப்,
- இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி,
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- கொத்தமல்லி - 1 கைப்பிடி.
- தாளிக்க:-
- ========
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
- பட்டை - சிறிது,
- கிராம்பு - 5,
- ஏலக்காய் - 4,
- பிரிஞ்சி இலை - 2,
செய்முறை
- தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
- வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறி சேர்த்து வதக்கவும்.
- கறி நன்கு வதங்கியதும் உப்பு, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 10,12 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.
- ஆறியதும் திறந்து தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து தக்காளி நன்கு வெந்து, எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
-
குறிப்பு
சாதத்தில் கலந்து சாப்பிட, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
45 நிமிடங்கள். |