ஆந்திரா மீன் குழம்பு

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

மீன் - 1/2 கிலோ (அதிகம் எலும்பு இல்லாதது),
பெரிய வெங்காயம் - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி,
தக்காளி - 3,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
உப்பு - தேவையான அளவு,

தாளிக்க:
------------
கறிவேப்பிலை - 2 கொத்து,
கடுகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 10,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.


 

மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், முழு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வாசனை வந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும். மீன் வெந்ததும், இறக்கவும்.


பார்க்க கலர்ஃபுல்லா இருக்கும். காரம் அதிகம் விரும்புவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

I LIKED THE RECEIPE VERY MUCH . I COOKED YESTERDAY AND IT WAS VERY DELICIOUS. THANK YOU MY FRIEND.

அன்பு எலிசபெத்,
அறுசுவைக்கு புதிதா? தங்கள் வரவு நல்வரவாகுக.
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்னிக்கு இந்த குறிப்பு தான் செய்ய போறேன்.பாப்பாவுக்கு கொடுப்பதால் கொஞ்சம் மிளகாய் கம்மியா போட போறேன்,மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது போல் செய்ய போறேன்,நான் செய்யும் மீன் குழம்பில் இருந்து சற்று வித்தியாசம்னு பார்த்தா இதில் நீங்க இஞ்சி சேர்த்திருப்பது தான்.எப்படியும் நல்லா வரும் என்பதால் இப்பவே நன்றி சொல்லிடறேன்!

அன்பு சுகன்யா,
நன்றிக்கு நன்றி. குழந்தைக்கு கொடுப்பதால் காரம் குறைவாக இருப்பது நல்லது தான். இஞ்சி சேர்ப்பதால் தான் இது வித்தியாசமாக இருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

This is my first attempt for மீன் குழம்பு.It was delicious.Thank you.

அன்பு சுஜாதா,
உங்க பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று உங்க ஆந்திரா மீன் குழம்பு செய்தேன்,அஞ்சப்பர் மீன் குழம்பு மாதிரி பார்ப்பதற்கும் சுவையும் அபாரம்,என் மகனிடம் தான் நான் எப்பவும் சமைத்தவுடன் ருசி பார்க்கச்சொல்வேன்,அவனோட comments,it rocks!
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
நலமா? என்ன ஒற்றுமை!! உங்க குறிப்புக்கு நான் பின்னூட்டம் கொடுத்தூட்டு வர்றேன். இங்க எனக்கு நீங்க கொடுத்திருக்கீங்க. உங்க பையனுக்கு ரொம்ப பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம். என் பையனுக்கும் இது ரொம்ப பிடிக்கும். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மீன் குழம்பு,ரவா இட்லி போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறேன்.அட்மின் இணைத்தவுடன் பார்த்துட்டு பதில் சொல்லுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
படங்கள் அனுப்புங்கள். பார்த்து கண்டிப்பாக சொல்கிறேன்.
நீங்கள் சிரத்தையோடு செய்வது சேலம் மீன் குழம்பு படத்திலேயே பார்த்தேன். அதுதான் முக்கியம். அப்படி செய்தால் கண்டிப்பாக நன்றாகத்தான் வரும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ஆசியா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மீன் குழம்பின் படம்

<img src="files/pictures/andra_fish.jpg" alt="picture" />

தங்கள் வேலைப்பளு மத்தியில் போட்டொ இணைத்தமைக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மீன் குழம்பு படம் பார்த்தீர்களா?ரவா இட்லி படமும் இணைத்தாச்சு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
நலமா? குழந்தைகள் நலமா?
மூன்று முறை பதில் போட ஓப்பன் செய்து முடியாமல் போச்சு. படம் மட்டுமா, குழம்பும் சூப்பரா இருக்கே! மீன் குழம்பு சாப்பிடாத எனக்கே சாப்பிடணும் போல இருக்கே. ரொம்ப, ரொம்ப நல்லா செய்திருக்கீங்க, பாராட்டுகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.