நல்ல காரமாக இருப்பதுதான் இதன் ஸ்பெசல். வித்தியாசமான சுவையும் கூட.
தேவையானப் பொருட்கள்
- மீன் - 1/2 கிலோ (அதிகம் எலும்பு இல்லாதது),
- பெரிய வெங்காயம் - 4,
- இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி,
- தக்காளி - 3,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
- தனியா தூள் - 2 மேசைக்கரண்டி,
- புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
- உப்பு - தேவையான அளவு,
- தாளிக்க:
- ------------
- கறிவேப்பிலை - 2 கொத்து,
- கடுகு - 1 தேக்கரண்டி,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
- காய்ந்த மிளகாய் - 10,
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை
- மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.
- வாணலியில் எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், முழு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வாசனை வந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
- மீன் வெந்ததும், இறக்கவும்.
-
குறிப்பு
பார்க்க கலர்ஃபுல்லா இருக்கும். காரம் அதிகம் விரும்புவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |