தட்டைப் பயறு முழு கத்தரிக்காய் குழம்பு

தேதி: February 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பிஞ்சு கத்தரிக்காய் -- 5 என்னம் (காம்பில் பாதி வெட்டி, பின்னால் இருந்து பாதி பாதியாக நான்காக ஆனால் முழுதாக இருக்குமாறு வெட்டவும்)
தட்டைப் பயிறு -- 1 கப் (வேகவைத்தது)
வெங்காயம் -- 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
வெந்தயப் பொடி -- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -- 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 2 1/2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
புளி -- 1 கோலி அளவு (கரைத்து வடிகட்டி வைக்கவும்)
தேங்காய் -- 2 பத்தை (நன்கு மாவு போல அரைத்தது)


 

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
பின் வெந்தயப் பொடி,பெருங்காயம், வெங்காயம், தக்காளி சேர்த்து பேஸ்ட் போல வதக்கி கத்தரிக்காய் சேர்த்து நன்கு கத்தரிக்காய் உடையாமல் வதக்கி உப்பு, சாம்பார் பொடி போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி கொதித்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
இதனுடன் வேகவைத்த தட்டாம்பயிறு சேர்த்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதிவந்ததும் 1 டீஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி கலக்கி நன்கு கொதித்ததும் இறக்கி பரிமாரலாம்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

My amma makes this kulumbu exactly like your recipe. My amma used to tell this is one of the Kongu Nadu special. She also use to add some karuvadu some time.This brought so much wonderful memories to me.Thanks.