குழந்தைகள் ஆலோசனை மையம்

புத்துணர்ச்சியுடன் இருக்கும் அருசுவை இல் நம் வீட்டு புத்துணற்வு தரும் நம் செல்வங்களை(குழந்தைகள்) வளர்க்கும் முறை,நம் அனுபவங்கள் பற்றி பேசலாமே?

சில பேருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி சரிவர தெரியாமல் இருக்கலாம்,சில பேர்க்கு இதில் சந்தேகங்கள் இருக்கும்...இப்படி தெரிஞ்சவங்க ஆலோசனை சொல்லவும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கவும் பயனுல்லதாக அமையும் மேலும் ஸ்ருதி,பாத்திமா போன்ற தாய்மை அடையும் பெண்களும் பயன் பெற முடியும்...

ஏன் என்றால் பிள்ளையை பெறுவதை விட அதை பேணி வழற்பதுதான் கடினம்..அதிலும் நாம் வெற்றி பெற வேண்டும் இல்லயா?

முதல் பதிவை நானே போடுகிறேன் இவை என் அனுபவங்கள்

என் பிள்ளைக்கு எப்படி சாப்பாடு கொடுக்கனும்,என்னலாம் கொடுக்கனும்,எதலாம் சொல்லி வளர்க்கனும்..எப்படிலாம் ஆளாக்க்னும் நு என் மனதில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும்...அதுபோல் அவளை வள்ர்த்து இருக்கிறேன் இதுவரை....
ஆனாலும் நான் ஒலுங்காக வளர்கிறேனான்னும் மனதில் தோன்றும்...

அவளின் பிறப்பில் இருந்து இதுவரை கேம்ரா பண்ணி வைத்து இருக்கேன் அவளின் ஒவ்வொரு அசைவும் இருக்கு இப்ப அதை அவளே மம்மி நானா?ன்னு கேட்குறா,,,ரசிக்குறா..சிரிக்கு
றா..
அதை பார்க்குறப்ப எனக்கும் ஒரு சந்தோசம்..நிறைய புக்ஸ் அவளுக்குனே இருக்கு ரைம்ஸ்,வெஜ்டபில்ஸ் இப்படி,சில டைம் அவ பாட்டிக்கு அவளுக்கு தெரிஞ்ச இங்லீஸ் வேட்ஸ்,ரைம்ஸ்..பார்ட்ஸ் ஆப் பாடிஸ் இதெல்லாம் அவளுக்கு தெரிஞ்ச மழலை மொழியில் சொல்லி கொடுப்பா.....அவங்கலும் சிலவற்றை அவளிடம் கேட்டு தெரிஞ்சுப்பாங்க...அதில் கிடைக்கும் சந்தோசமே தனி..இதெல்லாம் எனக்கு தெரிஞ்சவைகள்..பிள்ளை பெற இருக்கும் தாய்மார்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்னு நினைக்குறேன்..

திருமணத்திற்க்கு முன் ஒரு சின்ன காயம் எனக்கு வந்தாலே ஆ...ஓன்னு கத்தி என் குடும்பத்தையே ஒரு வழி பண்ணிவிடுவேன்....அப்படி ஒரு பயந்தாங்கொல்லி...ஆனால் போன வருடம் என் பொன்னுக்கு முடியாமல் ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினோம்...அப்ப நான் மட்டும்தான் அவளுக்கு துணை ....
அம்மாக்கும் உடம்பு முடியாமல் இருந்ததால்..ஊரில் இருந்து வர முடியவில்லை...அப்ப நான் இருக்கு தைரியத்தை பார்த்து என் குடும்பத்தில் உள்ளவைகள்,என் கணவர் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்...
அதை இப்ப நினைத்தால் எப்படி இருந்தான்னு எனக்கே தரியல...
இறைவன்னுக்குத்தான் நன்றி சொல்லனும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் எல்லோருக்கும் நான் எப்ப போவேன்னு பார்த்து எல்லோரும் வாங்க....பதிவு தாங்க

யரெல்லாம் லைனில் இருக்கீங்கப்பா வாங்க வெளியே சீக்கிரம்

இப்பதன் வேலை முடிந்தது...என்ன ஜலீலாக்கா கொப்பளமா?உள்ளே எம்புட்டு பணம் இருக்கு...ஹா ஹா...
என்னை போல கேர்புள்ளா இருங்கப்பா....
எப்பவாவது நடக்குறது சரி இல்லை...என்னை பாருங்க என் பொன்னு எப்ப சமயல் அறை பக்கம் வந்தாலும்,அவ பொருமை தாங்க முடியால்மல் கையை சுட்டுப்பேன்,இல்லை என்னை தெரிக்க்கும்..க்ஹா ஹா....
ஜலீலாக்கா ரொம்ப பிரீயா இருக்கீங்க போல பதிவு நிறைய இருக்கு
அந்த சமயல் காரருக்கு குட் பை சொல்லிட்டேன்...நிம்மதியா இருக்கு
செல்விக்கா நீங்க போன் பண்ணிய நாளில் இருந்து நீங்க போட்ட நம்பருக்கு பண்ணிட்டே இருக்கேன் பெல் போயிட்டே இருக்கு...அது எந்த நம்பர்?/

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நலமா? உங்கள் பதிவுகளை பார்த்திருக்கிறேன். உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி.
என் பையனுக்கு 20 மாதம் ஆகின்றது.Toilet training எப்போ start பண்ணனும். ஏதேனும் ஆலோசனை தர முடியுமா?
அன்புடன்
ப்ரியா

பிரியா எட்டு மாதத்திலிருந்தே குழந்தை களுக்கு நாம் பேசுவது புரியும்.
அரைமணிகொருமுறை கொண்டு போய் விடுங்கல்.
டெய்லி கொண்டு போய் விட்டீங்கனா அங்க தான் போகனும் என்று தெரியும்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் டியர் பிரியா நலமா?உங்களுடன் பேசுவதிலும் எனக்கு சந்தோசம் என் பதிவுகளெல்லாம் பார்த்தீங்களா?
இப்படி ஒரு போன்னும் இருக்கான்னு தோனுமே>?தோனிச்சா? ஹா...ஹா..ஹா

நீங்கள் 8மாதத்தில் இருந்து கபோட்டில் வைத்து பழக்குங்கள்...(நான் சொல்லும் கபோட் வெஸ்டன் ஸ்டலில் இருப்பது)
1 வயது ஆனதும் பாத்ரூம் இல் இருக்க பழக்க படுத்துங்கள்....அடிக்கடி பாத்ரூமில் வைக்க பழக்க படுத்தனும்...அப்பத்தான் குழந்தைகள் பழகும்...

ஆரன்பத்தில் நமக்கு கஸ்டமாகத்தான் இருக்கும் ..நாளடைவில் எல்லாம் சரியாகிடும்....
அப்புறம் தரையில் ஏதும் யூரின் போய்ட்டாங்கன்னா...அவங்களிடம் நம் கையை ஆக்ஸ்ன் பண்னி இப்படி பன்னக்கூடாது பாத்ரூம் அதோ இருக்கு அதில்தான் இருக்கனும் அப்பத்தான் குட் பாய் ந்னு விபரமா சொல்லுங்க ஆரம்பத்தில் புரியாது நாளடைவில் புரியும்

பெரும்பாலான பெற்றோர்களின் கவலை குழந்தைகள் தூக்கத்தில் பாத்ரூம் போவதுதான் அதை தவிற்க்க,பிள்ளைகள் முழித்ததும் நிதானமாக அவர்களிடம் புரிய வைக்கனும்....இதெல்லாம் என் அனுபவம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...

தற்சமயம் தூக்கத்தில் மட்டும் கட்டில் பக்கத்தில் அவள் கபோடை வைத்து தூங்குவேன்(தூங்கும் சமயம் கண்டிப்பா பாத்ரூம் போனபின் தான் தூங்க வைக்கனும்..)தூக்கத்தில் பாத்ரூம் வந்தால் என்னை எழுப்பௌவாள் அந்த கபோடில் இருக்க வைத்து கழுவினபின் தூங்க வைப்பேன்....

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Mother's Grace.

எனக்கு 18 மாத குழந்தை உள்ள்து. இன்னும் தாய்ப்பால் கொடுக்கிறேன். அவனை எப்படி டாய்லெட்டில் பழக்குவது.
யூரின் ஹாலிலேயே போகிறான்.பால் குடித்துக்கொண்டே தான் தூங்குகிறான்.

Mother's Grace.

என்னுடைய பையனுக்கு 7 மாதம் தான் ஆகிறது. அவனிடம் ஹலோ அல்லது ஹாய் என்று சொன்னாலும் அவன் கையை எடுத்து காட்டுவான். பை என்று சொன்னாலும் கை லேசாக காட்டுகிரான். நாம் என்ன சொல்லி கொடுத்தாலும் சீக்கிரம் புரியும் திறன் இப்பொழுது உள்ள் குழந்தைகளுக்கு உண்டு.
நாம் குழந்தைகளிடம் நிறைய பேச வேண்டும். அப்பொழுது சீக்கிரம் எல்லாம் வந்து விடும்.
regards
siljavignesh

டியர் மர்லியா அஸ்ஸலாமு அலைக்கும்

அது கபோடு இல்லை கமோடு.

கபோடு என்றால் பீரோ ரேக்குகள்.

ஹ ஹ ஹா

பிரியா அரை மணிகொருமுறை பாத்துரூம்மில் கொண்டு போய் விடுங்கள்.
இது எல்லா குழந்தைகளுக்கும் உள்ள இயல்பே.
துங்கி கொன்டே என்றால் தலையனையை சற்று உயரமாக வையுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா
அய்யோடா நான் தப்பா சொல்லிட்டேன்னு எவ்லோ சிரிப்பு உங்களுக்கு....அப்போ அவசரத்தில் டைப் பண்ணியது அதானால்தான் என் ஊர் தோரனையில் அப்படி அனுப்பிட்டேன்...எங்க ஊரில் அப்படி பேசி,பேசி எனகும் அப்படியே பலகிபோச்சு...கபோடுன்னு தான் சொல்லுவோம் நாங்க...அதான் அப்ப்டியே அனுப்பிட்டேன்.....தமிழ் சொற்கள் கொச்சையாக மாறுவது இல்லயா அதேபோல்தான் இதுவும்.....அசடு வலியுது தொடைதுக்கங்க.....

அப்புறம் பாவம்கா 7 மாதக்குழந்தையை போய் பாத்ரூமில் அடிக்கடி வைத்து கஸ்டபடுத்துவது என்னால் நினைக்கவே முடியல...11 மாதம் 1 வயதுன்னா பரவா இல்லை....

டியர் silja,
நீங்க சொல்லுவது சரித்தான் தனிக்குடும்பத்தில் வளக்கப்படும் பிள்ளைகளை விட கூட்டு குடும்பத்தில் வளக்கப்படும் பிள்ளைகளுக்கு சீக்கிரமாகவே பேச்சு திறன் வருகிறதாம்.வயற்ரில் இருக்குறப்பவே பேச ஆரம்பிக்கனும்..அது குழந்தை அறிவு திறனுக்கும் நல்லது..நாம் பேசுவது நிச்சயம் அதற்க்கு புரியும்....

டியர் உமா...தாய் பாலுடன் திட உணவும் கொடுக்குறீர்கள்தானே??// திட உணவை அதிக படுத்தனும்...
இதற்க்கு பதில் தந்தால் எனக்கு தெரிஞ்சதை சொல்லுகிறேன்..
சில குழந்தைகள் பால் குடித்துக்கொண்டு தூங்குவது இயல்பே நாளடைவில் சரியாகிவிடும்...ஆனால் இப்ப உடனே நிறுத்துவது பற்றி எனக்கு தெரியல சாரி....
யூரின் ஹாலில் போவதாக சொல்லி இருக்குறீர்கள்...அதற்க்கு நீங்கள்தான் பேசி(குழந்தைகளுட பேசுறப்ப நாமும் குழந்தையாகவே மாறிடனும்..அதனால்தான் சைகை பண்னுங்கன்னு மேலே சொல்லி இருக்கிறேன்)புரிய வைக்கனும் அது உங்கள் கையில்தான் இருக்க்கு... 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை டாயிலட்டில் வைத்து பழக்குங்கள்..அப்புறம் ஹாலில் போனபின் இப்படி பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டே இருங்கள்....நிச்சயம் மாறுதல் நடக்கும்...அனைவருக்கும் தாமதமாக பதில் தந்ததற்க்கு மன்னிக்கவும்..அருசுவைக்கு மேல் என் வீட்டு நெட் செமத்தியா அடம்பிடிக்குது ஓப்பன் ஆகவே இல்லை அதனால்தான் லேட்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நீங்க ரெண்டு பேரும் என்ன ப்பா பேசுரீங்க..ஒருத்தர் கபோடு இன்னொருத்தர் கமோடு அது என்ன? potty dhaane?

நான் முதலில் மர்ழியா மிரண்டு போயிட்டேன்..இனி மர்ழியா வீட்டுக்கு கூப்டா ஓடி ஒளிஞ்சுடனும்னு நெனச்சேன்..ஹஹஹா..அப்ரம் தான் ஓஹ் pottyய தான் அவங்க பாஷையில் சொல்ராங்க போலிருக்குன்னு நெனச்சேன்.
டாலெட்டில் பேபி சீட்டில் அவங்க சரியா உக்கார தொடங்கியது முதல் கூட உக்கார வெக்கலாம்...வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு டயபரை அவிழ்த்து ட்ரெயின் பன்னினால் accident ஆனால் தரையை துடைக்க வேண்டுமே என்ற கவலை இருக்கும்...டயபருடனேயே நடக்கட்டும் ..
பழக்கும் முன் உங்களுக்கு அதன் டைமிங் சரியா தெரிய வேண்டும்....அதாவது குழந்தையை சும்மா ஒரு நாளைக்கு 30 தடவை டாலெட்டில் விட்டா அது வெறுத்து போயிரும்..அதனால் ஒரு 1 வாரத்துக்கு துனி யூஸ் பன்னுங்கள்..இல்லாட்டி டயபரை செக் பன்னுங்கள்...அப்ப உங்களுக்கு இவ்வளவு மனிநேரஹ்திற்கொருமுறை குழந்தை சிறுநீர் கழிக்கிரதுன்னு ஐடியா கிடைக்கும்..
அதன் பின் ரொம்ம்ப ஆர்ப்பாட்டம் பன்னாம அமைதியா நல்ல சத்தமா பாட்டு பாடிட்டு டாஇலெட்டில் சீட்டில் உக்கார வெய்யுங்க..முதலில் அடம் புடிச்சா அங்க இருந்து தூக்கிடுங்க..பிறகு ட்ரை பன்னுங்க..

பின் எப்பவாவது ஒரு முறை அதவா டாலெட்டில் சரியா சிறுநீர் கழித்தால் ஆஹா ஓஹோன்னு பாராட்டி கைத்தட்டுங்க...அதுக்கு புரியும் எதுக்காக பாராட்டுன்னு...எல்லாம் பழக்கும் முன் முதலில் சிறுநீர் கழிப்பதற்கு உங்கள் மொழியில் என்னவோ அதை முதலில் சொல்லி பழக்குங்கள்.
தவறாமல் குழந்தையை சுத்தமாக கழுகி கைய்யை சோப் போட்டு கழுக சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்....மற்ற்வை பிறகு

மேலும் சில பதிவுகள்