தேவையானப் பொருட்கள்
- இறால் - 15
- தேங்காய் துருவல் - 1 கப்
- இஞ்சி &பூண்டு விழுது - 3/4 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு
- தாளிக்க
- ========
- தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 4 நறுக்கியது
- கறிவேப்பிலை - 10 இலை
|
செய்முறை
- தேங்காய் துருவலை பரந்த குக்கரில் போட்டு நங்கு வறுத்து ப்ரவுன் கலருக்கு வர வேண்டும்(தேங்காய் ஓடு நிறத்துக்கு).பின் மைபோல அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் தாளிக்கக் கொடுத்துள்ள,இறால் தவிற மற்ற பொருட்களுடன் தேங்காய் விழுது சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
- கொதி வந்ததும் இறால் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதித்தால் போதும்
- கடைசியில் எண்ணையில்,வெங்காயம்,வேப்பிலை தாளித்து கொட்டுங்கள்.
- மிகவும் சுவையான பழமையான கேரள குழம்பு வகை இது
|
குறிப்பு:
கடைசியில் வேக வைத்த மரவள்ளி கிழங்கு,அல்லது சேம்பு கிழங்கு சேர்க்கலாம்..சாதத்துக்கு,பரோட்டாவுக்கு,இடியப்பம் புட்டுக்கு பொருந்தும்.
தேங்காயை ஒட்டுமொத்தமாய் சுமார் 25 தேங்காய் வறுத்து அரைத்து வெளிநாட்டுக்கு கொண்டு வந்து ஃப்ரீசரில் வைப்போம்...ஒரு கட்டி போட்டால் போதும்..
குழம்பு செய்து முடிந்த பின் இன்னும் கொஞ்சம் கெட்டியாகும் அதனால் நீர்க்க இருந்தால் பயம் வேண்டாம்
வழங்கியவர்
தளிகா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 |
20 நிமிடம் |
30நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
19 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -