ஓட்ஸ் கஞ்சி (டயட் கஞ்சி)

தேதி: February 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் -- 1/4 கப்
தண்ணீர் -- 2 கப்
ஓட்ஸ் -- 1/2 கப்
உப்பு -- ருசிக்கேற்ப
புதினா இலை -- 3 என்னம் (கையாலே ஒரு இலையை 8 துண்டமாக்கவும்)


 

பாலை தண்ணீர் கலந்து காய்ச்சவும்.
பின் ஒரு கொதிவந்ததும் ஓட்ஸை போட்டு நன்கு கொதிக்க வைத்து கிளறவும்.
பாயசம் போல ஆனவுடன் இறக்கி உப்பு, புதினா இலை சேர்த்து கொஞ்சம் சூடாக குடிக்கவும்.
தினமும் காபிக்கு பதில் இதை குடித்து வரலாம்.


சாப்பிடும் போது கொஞ்சம் அளவு குறைத்து சாப்பிட இது வசதியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஓட்ஸ் கஞ்சி சுவையாக இருந்தது. மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"