www.arusuvai.com
பலாக்காய் கடலை பருப்பு கூட்டு
தேவையானப் பொருட்கள்
- பலாக்காய் -- 10 என்னம் (வேகவைத்து தோலை நீக்கியது)
- கடலை பருப்பு -- 1/4 கப்(வேகவைத்தது)
- சின்ன வெங்காயம்-- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 3 என்னம்
- சாம்பார் பொடி -- 1/2 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் -- 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேற்ப
- கடுகு, உளுத்தம் பருப்பு -- 1/2 டீஸ்பூன்
செய்முறை
-
-
-
- வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து ஒரு இனுக்கு கறிவேப்பிலை போடவும்.
- பின் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
- அதனுடன் பலாக்காய், கடலை பருப்பு சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து சாம்பார் பொடி போட்டு ஒரு கலக்கு கலக்கி கொதிக்கவிடவும்.
- அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
-
-
-
-
-
-
-