தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 2 டம்ளர்,
- பச்சரிசி - 1/2 டம்ளர்,
- உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்,
- வெந்தயம் - 1 தேக்கரண்டி,
- இஞ்சி - சிறு துண்டு,
- பச்சை மிளகாய் - 5,
- பெருங்காயம் - சிறிது,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- மிளகு - 2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 1 கொத்து,
- உப்பு - தேவையான அளவு,
- நெய் - 50 கிராம்.
|
செய்முறை
- புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை ஒன்றாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
- பிறகு தனித்தனியாக கிரைண்டரில் போட்டு அரைத்து, ஒன்றாக கலந்து, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
- புளித்த பின் ஊற்றுவதற்கு முன் மிளகை நைசாக தட்டி போட்டு சேர்த்து கலக்கி தோசைக்கல்லில் நெய் தடவி ஊற்றி, சிவக்க விட்டு, துருப்பி போட்டு நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
|
குறிப்பு:
மிளகும், நெய்யும் சேர்ந்து மணமாக இருக்கும். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கத்தரி கொத்சு நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 மணி நேரம். |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நொடி முன்பு -
2 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் முன்பு -
9 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -