தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 1 டம்ளர்,
- பச்சரிசி - ஒன்றரை டம்ளர்,
- உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி,
- சின்ன ஜவ்வரிசி - 1 ஸ்பூன்,
- வெந்தயம் - 1 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 1/4 மூடி,
- ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி,
- வெல்லம் - 1/4 கிலோ,
- உப்பு - ஒரு சிட்டிகை,
- எண்ணெய் - தேவையான அளவு.
|
செய்முறை
- புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- மாவை எடுக்கு முன் வெல்லம் ( விருப்பப்பட்டால் 2 ஏலக்காய்) சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
- ஊற்றுவதற்கு 1/2 மணி நேரம் முன்பு, ஆப்ப சோடா, சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 1/2 மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி,
- மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்கவும். (நடுவில் மாவு மொத்தமாகவும்,
- ஓரத்தில் மெலிதாகவும் இருக்க வேண்டும்).
|
குறிப்பு:
தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
2 மணி நேரம். |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
2 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 50 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
20 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -