உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

காலிஃப்ளவர் பிரியாணி.


ஒரே மாதிரி விஜிடபிள் பிரியாணியே செய்வதற்கு இது வித்தியாசமான பிரியாணி.

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
  • காலிஃபிளவர் - 1,
  • பெரிய வெங்காயம் - 2,
  • பச்சை மிளகாய் - 6,
  • தக்காளி - 3,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
  • எலுமிச்சம் பழம் - 1,
  • இஞ்சி - 1 அங்குல துண்டு,
  • பூண்டு - 10 பல்,
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 2,
  • ஏலக்காய் - 2,
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி,
  • கொத்தமல்லி - 1 கட்டு,
  • உப்பு - தேவையான அளவு,
  • நெய் - 50 கிராம்.

செய்முறை

  • அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை உதிராக வடித்து உப்பு, 1 ஸ்பூன் நெய் கலந்து ஆற வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயையும் நீளமாக நறுக்கி வைக்கவும்.
  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
  • காலிஃப்ளவரை சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.
  • நறுக்கிய காலிஃப்ளவரை சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சியி தட்டி வைக்கவும், பூண்டை உரித்து வைக்கவும்.
  • பெரிய பாத்திரத்தில் நெய்யை விட்டு காய்ந்தவுடன் தட்டி வைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி சேர்க்கவும்.
  • பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • சிறிது நேரம் வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • வதக்கியபின், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா நன்கு சுண்டியதும் வேக வைத்த காலிஃப்ளவர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • வதங்கியபின், ஆறவைத்த சாதம், எலுமிச்சம் பழசாறு சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி 5 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.

குறிப்பு:

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும். ஆனியன் மசாலா ரைய்தா, புதினா சட்னியுடன் சூப்பராக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 30 நிமிடங்கள்.
  random food image


comments
செல்வி அக்கா
நவம்பர் 25, 2008 - 1:42pm - வழங்கியவர் Mrs vathsala Na...

காலிஃப்ள்வர் பிரியாணி செய்தேன்.வித்தியாசமான சுவை மிகவும் நன்றாக இருந்தது.

காலிஃப்ள்வர் பிரியாணி ...
நவம்பர் 25, 2008 - 2:40pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு வத்சலா,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
நவம்பர் 28, 2008 - 7:15am - வழங்கியவர் ammulu

அன்பான செல்வி மேடம் நேற்று தங்களின் காலிப்ளவர் ப்ரியாணி செய்தேன். ரெம்ப நன்றாக வந்தது.புதினா கிடைக்கவில்லை. கொத்தமல்லிச்சட்னிதான் செய்யமுடிந்தது. அதுவும் நன்றாகதான் இருந்தது. மொத்தத்தில் ப்ரியாணி சூப்பர். நன்றி.அன்புடன் அம்முலு

காலிப்ளவர் ப்ரியாணி ...
நவம்பர் 28, 2008 - 1:35pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு அம்முலு,
பாராட்டுக்கு நன்றி. கொத்தமல்லி சட்னியும் நல்லா தான் இருக்கும். உனக்கு பிரியாணி பிடித்திருந்தது ரொம்ப சந்தோஷம்.
அன்புடன்,
செல்வி.

காலிஃப்ளவர் பிரியாணி
டிசம்பர் 1, 2008 - 2:43pm - வழங்கியவர் mali

செல்வி அக்கா காலிஃப்ளவர் பிரியாணி அருமை! காலிஃப்ளவர் பிரியாணி பிடிக்காத கணவரும் விரும்பி சாப்பிட்டர். நான் தான் சாதத்தை சிறிது குழைவாக வைத்துவிட்டேன், மற்றபடி ருசியாக இருந்தது! நன்றி!

காலிஃப்ளவர் பிரியாணி...
டிசம்பர் 1, 2008 - 5:06pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் மாலி,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.