முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

தேதி: February 17, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய்- 3
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க


 

முதலில் சமைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே துவரம்பருப்பை சிறிதளவு நீரில் ஊற வைத்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடலைப் பருப்பை அரை வேக்காடு வேக வைத்து அதில் நறுக்கிய கோஸ், வெங்காயம், தக்காளி, மஞ்சள் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள துவரம்பருப்பு விழுது ஆகிவற்றை சேர்த்து போதிய நீர் விட்டு வேக விடவும்.
வேகும் நேரத்தில் மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை நீண்ட நேரம் வேக வைக்கத் தேவையில்லை.
இறுதியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் கொட்டவும்.
இப்போது சுவையான முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.


இந்த கூட்டில் கோஸ்க்கு பதிலாக வெள்ளை பூசணி, சௌசௌ போன்ற காய்களை வைத்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா இன்று மதியம் இந்த கூட்டு செய்தேன், நன்றாக இருந்தது மிக்க நன்றி..

உங்களை ரெம்ப நாளா காணாமே,கிராப்ட் வொர்க் செய்து அனுப்புங்கள்,முடியும் போது வந்து போங்க

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மஹிஸ்ரீ முட்டைகோஸ கூட்டு நன்றாக இருந்த்து நன்றி