மஸ்ரூம் கறி

தேதி: February 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஸ்ரூம் -- 100 கிராம் (சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கியது)
பெரிய வெங்காயம் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (மிகவும் பொடியாக நறுக்கியது)
இஞ்சி -- 1 அங்குலம் (மிகவும் பொடியாக நறுக்கியது)
எண்ணைய் -- 4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -- 1 சிட்டிகை
மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
தனியா தூள் -- 2 டீஸ்பூன்
கரம் மசாலா -- 1/2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சியை போட்டு வதக்கவும்.
சிவந்ததும் தக்காளியை போட்டு வதக்கவும்.
பின் மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து வாணலியை மூடி மிதமான தீயில் வைக்கவும்.
நன்றாக கிளறி 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறலாம்.
மஸ்ரூம் கறி ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

பனீர் மஷ்ரூம் ஃப்ரையா?பனீர் எங்கே?

சுபா உங்க மஸ்ர்ரும் கறி செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது சப்பாத்திக்கு தொட்டு கொண்டோம் ரொம்ப நல்லா இருந்தது,நன்றி சுபா.

சுபா, எங்கே ஆளையே காணவில்லையே...
உங்கள் மஷ்ரூம் கறி மிகவும் நன்றாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்