தோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க - 3

தோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க.

அப்படா அருசுவை ஒரு வழியா ஓப்பன் ஆகிவிட்டது பாபி தம்பி நலமா?

கம்பியுட்டருக்கு கண் இருந்த அதுகூட அழுதிருக்கும் என்னை ஏன் இத்தனை தடவை ஓப்பன் பண்ணுகிறாய் என்று.
ஜலீலா

தோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க.

எல்லோரும் எப்படி இருக்கீங்க பா
தோழிகளே நலமா? வாங்க இங்க பேசலாம்.

அட வாங்க பா சிரிக்கலாம்
ஜலீலா

Jaleelakamal

தளிகா, மர்லியா
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜலீலா

Jaleelakamal

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
ஹா ஹா ஹா ஹா ஹூ
ஹூஹூ ஹூ ஹே ஹே ஹே கெ
க்கபிக்க என்ன ஜலீலாக்கா சிரித்தது போதுமா?அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதான் மேலே ஒரு பதிவு போட்டு இருக்கேனே லூசாட்டம் பார்கலயா?நானும்தான் ஓப்பன் பண்ணி,பண்ண்யே வெறுத்து போச்சு
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி ஒரு ஜாலியான த்ரெட்டை ஓபன் பண்ணி, உங்களால அதுல சந்தோசமா பேச முடியாம போகுதேன்னு.

நானும் எல்லாவிதத்திலயும் போராடித்தான் பார்க்கிறேன். பிரச்சனைகள் மேல் பிரச்சனையா இருக்கு. இப்ப புதுசா எடுத்த சர்வரும் அறுசுவை லோடு தாங்கலை. அறுசுவையை இடம் மாத்த சொல்லி எச்சரிக்கை கொடுத்துட்டாங்க. இப்ப மறுபடியும் வேற ஒரு சர்வருக்கு மாறணும். எல்லாமே என் சக்தியை தாண்டி போய்கிட்டு இருக்கிறதால ரொம்ப நொந்து போயிட்டேன். இதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும். எதுவா இருந்தாலும் இப்ப அறுசுவையை உடனே நிறுத்தணும். இல்லேன்னா இந்த சர்வர்ல இருந்து அவங்களா நீக்கிடுவாங்க. அடுத்த சர்வர் மாறும் வரைக்கும் தயவுசெஞ்சு நீங்க எல்லாம் அறுசுவை வளர்ச்சிக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருங்க. நான் எதாவது ஒரு வழி பண்ணி, அறுசுவையை மறுபடியும் கொண்டு வர்றேன். ஆனா, எத்தனை நாளாகும்னு தெரியல. :-(

அண்ணா நீங்க ஒன்னும் கவலப் படாதீங்க...செர்வெர் வேற கிடைக்கும்வரை காத்திருப்போம்..பாக்கலாம் செர்வரா நம்மளான்னு
லோட் தாங்காமல் என்று நீங்கள் சொன்னது புரியவில்லை...அப்படியானால் அதிகப்படியான பதிவுகள் கொடுக்காமல் பதிவுகளைக் குறைத்தால் சரியாகுமா?எப்படி?

பதிவுகள் அதிகமானால் சில பிரச்சனைகள் உள்ளன. அதற்காக பதிவுகளை குறைக்கச் சொல்லுதல் என்பது தீர்வு கிடையாது. அதேபோல் இப்போதை பிரச்சனை அதிக அளவிலான வருகையாளர்கள் பார்வையிடுவதால் உண்டாவது. அதிக வருகையாளர்கள் வருவதை பிரச்சனை என்று கூறக்கூடாது. அதுதான் இணையத்தளத்தின் வெற்றி. அதை தாங்கும் அளவிற்கு நமது சர்வர் இருக்கவேண்டும். இங்கேதான் நமக்கு பிரச்சனை.

உங்களுக்காக, தற்போது எத்தனை உறுப்பினர்கள், விருந்தினர்கள் பார்வையிடுகின்றனர் என்ற அட்மின் விண்டோவை அனைவர் பார்வைக்கும் திறந்து விட்டுள்ளேன். இந்த மன்றத்தில் மட்டும் தெரியாது. மற்ற பக்கங்கள் அல்லது முகப்பு பக்கம் சென்று இடப்பக்கம் பார்த்தீர்கள் என்றால், பார்வையிட்டுக் கொண்டிருப்போர் என்ற பெட்டியில் தெரியும்.

ஆமாம் பார்த்தேன் அட்மின் வின்டோ...435 பேரா...நினைக்க முடியலை..பேசாம ஆள்கு கொஞ்சம் டோனேட் பன்னி ஒரு செர்வர் வாங்கலாம்

இது கடைசி 5 நிமிசத்துல விசிட் பண்ணுனங்க ரெக்கார்ட்ச். நீங்க பாக்கிற நேரத்துல 435, அது அப்பப்ப அதிகமாகும் குறையும். ஒரு நேரத்துல 800, 900, ஆயிரம்னு போறப்ப சர்வர் படுத்துடும்.

பாபு தம்பி ஒன்றும் பிரச்சனையில்லை மொதுவா பாருங்க ஆனா சீக்கிரம் சால்வ் பண்ணுங்க, .
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்