வாழ்த்துக்கள் அட்மின்.

வாழ்த்துக்கள் அட்மின். கடந்த சில நாட்களாக நமது தளத்தை பார்வையிடமுடியாமல் மிகவும் வருத்தமாக இருந்தது. இப்பொழுதும் உறங்கப் போகும் முன் பார்வையிடலாம் என்று வந்தேன்,உண்மையை கூறவேண்டுமானால் முகப்பை பார்த்ததும் கண்ணீர் கலங்கிவிட்டது!!! அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் புதிய சர்வர் மாற்றியுள்ளீர்களா? தளத்தை மேம்படுத்த தாங்களின் கடின உழைப்பிற்க்கு தலை வணங்குகின்றேன். இந்த சர்வர் பிரச்சனைக்கு எங்களால் உங்களுக்கு உதவ முடியவில்லையே என்று பலமுறை நினைத்து கவலையுற்றதுண்டு, தாங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் நாங்கள் எந்த விதத்திலாவது மென் மேலும் நமது தளத்தின் வளர்ச்சியை முன்னிட்டு தங்களுக்கு உதவ முடியுமா என்று கூறுவீர்களா? நன்றி.

மிக்க நன்றி. புதிய சர்வருக்கு தளத்தினை மாற்றிவிட்டேன். DNS propagation ஆக சில நாட்கள் ஆகும். நமது domain registrar இடம் அந்த விசயத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அதுவரை தளத்தினை நிறுத்தி வைக்கவேண்டாமென, தற்போது பழைய சர்வரில் இருந்து இந்த சர்வருக்கு ரீடைரக்ட் செய்துள்ளேன். எனவே மேலே இணைய முகவரிக்கு பதில் அனைவருக்கும் IP address (64.235.47.70) தான் கிடைக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு பிறகு அது சரியாகிவிடும். அதுவரை தாங்கள் அறுசுவையை பயன்படுத்துவதில் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இந்த சர்வராவது ட்ராபிக்கை சமாளிக்கின்றதா என்று பார்க்கலாம்.

DNS resolve ஆன பின்புதான் mail server enable செய்யவேண்டும். அதுவரை மெயில்கள் அனுப்புதல் இயலாது. தயவுசெய்து இரண்டு நாட்களுக்கு யாரும் பெயர்ப்பதிவு செய்யவேண்டாம். அப்படி செய்பவர்களுக்கு கடவுச்சொல் அடங்கிய மின்னஞ்சல் வராது. மற்றபடி ஏற்கனவே பதிவு செய்த உறுப்பினர்கள் வழக்கம்போல் மன்றத்தில் உரையாடலாம். அதில் பிரச்சனைகள் இல்லை. குறிப்புகள் கொடுப்போர் தங்கள் பங்களிப்பினை தொடரலாம்.

அண்ணா,

நானும் பல தடவ திறந்து பாத்து ரொம்ப வருத்தமா இருந்தேன். இப்ப தூங்கப்போறமுன்ன பாத்தா அறுசுவை வருது :-) ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)

வாழ்த்துக்கள் அண்ணா :-)

இனி எந்த ப்ரெச்சனையும் இருக்காது இல்ல :-) அறுசுவை இல்லாம எதையோ ரொம்ப மிஸ் பண்ண மாதிரி இருந்தது :-( இப்ப தான் திரும்பவும் சந்தோஷமா இருக்கு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இனி அதிகப் பிரச்சனைகள் இருக்காது என்று நம்புகின்றேன்.

தற்போது நமக்கென்று முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட அதிக திறன் கொண்ட சர்வர் எடுத்துள்ளோம். இதில் கட்டுப்பாடுகள் கிடையாது. திறனும் மிக அதிகம். கொடுத்த விலையும் மிகவும் அதிகம். அதற்கு ஏற்றார்போல் செயல்பாடும் இருக்கும் என்று நம்புகின்றேன்.

தற்போது அறுசுவையின் பக்கங்கள் திறப்பதில் பிரச்சனைகள் எதுவும் இருக்கின்றதா, வித்தியாசங்கள் எதுவும் இருக்கின்றதா, பதிவுகள் கொடுக்க முடிகின்றதா என்பதை எல்லாம் எனக்கு உடன் தெரியப்படுத்துங்கள். பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தால் உடன் சரி செய்யலாம்.

feedback, name registration வேண்டாம். அவை ஒர்க் ஆகாது. மற்ற அனைத்தையும் பரிசோதித்து பிரச்சனைகள் இருப்பின் தெரிவிக்கவும்.

அண்ணா,

ரொம்ப ஃபாஸ்டா ஓபன் ஆகுது. பதிவுகளும் எந்த பிரச்சனையும் இல்லாம பதிவாகுது. ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நாளைக்கு அப்புறம் :-)

அடுத்தடுத்த பேஜ்க்கு போறதும் ரொம்ப ஈஸியா இருக்கு :-) அதுவும் ரொம்ப ஃபாஸ்டா இருக்கு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஒவ்வொரு பேஜும் பட் பட்னு பாஸ்ட்டா ஓப்பன் ஆகுது. எந்தப் பிரச்சனையும் இல்லை. எனக்கு இந்த பக்கத்தில் லாகின் பண்ணி நுழைஞ்சும் மீண்டும் உள்நுழையவும்னு வந்தது. பேஜை ரெப்ரஷ் பண்ணவுடன் சரியாயிடுச்சு. மற்றபடி இப்ப அறுசுவையின் ஒவ்வொரு பக்கமும் திறக்க விநாடி நேரம்தான் ஆகுது. வாழ்த்துக்கள்.

அப்பாடா… இத்தனை நாளா வருவியா… வரமாட்டியா… இல்லேன்னா உம்பேச்சு கா….ன்னு பாடி(திட்டி)க் கொண்டே இருந்தேன். எல்லாரும் நம்ம அட்மினுக்கு ஒரு ஓ போடுங்க…. நன்றி அட்மின். அறுசுவை சகோதரிகள் அனைவரும் நலமா?

அறுசுவை வராமல் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் வருகிறதா இன்றாவது வருமா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இன்று முழுவதும் ரெம்பவும் பிஸி அதனால் பிசி பக்கமே வரமுடியவில்லை இப்பொழுதுதான் பார்க்கிறேன் அறுசுவை கிடைத்துவிட்டது ரெம்பவும் சந்தோஷமாக இருக்கிறது பக்கங்கள் விரைவாக ஓபன் ஆகிறது அட்மின் அண்ணாவின் கடின உழைப்பிற்க்கு பலன் கிடைத்துவிட்டது மனோஹரி மேடம் சொன்னது நானும் நினைத்தேன். அறுசுவை எப்பொழுதும் போல இருக்க வாழ்த்துக்கள். அறுசுவையின் அனைத்து சகோதரிகளும் நலமா? எங்க ஜலீலா அக்கா,தளிகா,செல்வி மேடம் யாரும் ஆன்லைனில் இல்லையா.

அன்புடன் கதீஜா.

அட்மின் அவர்களுக்கு புது சர்வர் மாத்தியாச்சுன்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டீங்க. அதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு நீங்க சொல்லாமலே தெரியுது. சர்வர் என்ன கொஞ்ச நஞ்ச விலையா:-( இனிமேல் நல்லதே நடக்கும் என நம்புவோம். பக்கங்கள் எல்லாம் படு ஸ்பீடா ஓப்பன் ஆகுது. அறுசுவையின் வளர்ச்சிக்கு உதவ தயாராய் இருக்கிறோம்.

ஒருவாரம் கழித்து தமிழில் டைப் அடிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கு:-)

அட்மின் அவர்களுக்கு ரொம்ப நன்றி. சைட் ஒபன் ஆகாம ரொம்ப கவலையா இருந்துச்சு.இப்ப சந்தோஷமா இருக்கு. வேகமா ஒபென் ஆகுது

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அனைவருக்கும் காலை வணக்கம்.
அறுசுவை தோழிகள் அனைவரும் நலமா.
ஜலீலா அக்கா, மர்ழியா அக்கா, கதீஜா அஸ்ஸலாமு அலைக்கும்.
சுஜி, ஸ்ருதி, நர்மதா எல்லாரும் எப்படி இருக்கீங்க.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்