உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சிக்கன் பிரியாணி

 

இது நான்கு நபர்களுக்கு செய்யும் அளவு

தேவையானப் பொருட்கள்

  • பாசுமதி அரிசி - முன்று டம்ளர்
  • சிக்கன் - அரை கிலோ
  • வெங்காயம் - நான்கு
  • தக்காளி - முன்று
  • தயிர் - கால் டம்ளர்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
  • கொத்து மல்லி - கால் கட்டு
  • புதினா - எட்டு இதழ்
  • பச்ச மிளகாய் - நாலு
  • மிளகாய் தூள் - ஒன்னேகால் தேக்கரண்டி
  • எலுமிச்சை - அரை பழம்
  • பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
  • கிராம்பு - இரண்டு
  • ஏலம் - ஒன்று
  • எண்ணை - கால் டம்ளர்
  • நெய் - ஒரு தேகக்ரண்டி
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

  • முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற விக்கவும்.
  • சிக்கனை லெக் பீஸ் போட வேண்டாம் அது பிரை செய்தால் தான் நல்ல இருக்கும்..
  • எலும்புடன் சேர்ந்த சிக்கனை அரை கிலோ கழுவி தண்ணீரை வடிகட்ட்வும்.
  • எண்ணையை காய வைத்து பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்து மல்லி, புதினாவை பொடியாக நருக்கி போடவும்.
  • பச்ச மிளகாயை இரண்டாகா ஒடித்து போடவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
  • தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும்.
  • சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசீயில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.
  • தக்காளி சுருண்டவுடன் சிக்கனை போட்டு கிள்றை தயிரையும் சேர்த்து. நல்ல வேகவிடவும்.
  • முடிபோட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருகும்.
  • நல்ல வெந்து எண்ணை முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு.
  • உலை கொதிக விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணை கொஞ்சமா லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கனும்.
  • ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கிழே கொட்ட வேண்டாம்) அது தம் போடுவதற்கு தேவைபடும்.
  • வெந்த சாதத்தை கிரேவியில் கொட்டி கிரேவியில் கொட்டி சமப்படுத்தி தம் போடவும்.
  • இதற்கு தொட்டு கொள்ள , தயிர் சட்னி, எண்ணை கத்திரிகாய், சாலட் போன்றவை. ரொம்ப நல்ல இருக்கும்.

குறிப்பு:

தம் போடும் முறை - தீயை சிம்மில் வைத்து தம் போடும் கருவி (அ) கனமான தோசை தவ்வா வைத்து மேலே பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு அதன் மேல் கஞ்சி தண்ணீர் வைத்துள்ள சட்டியை வைக்கவும். பத்து நிமிடம் கழித்து ரெட் கலர் பொடியை ஒரு ஸ்பூன் கஞ்சி தண்ணீரில் கரத்து தெளிக்கவும், ஒரு தேகக்ரண்டி நெய்யையும் பரவலாக விடவும். இப்போது லேசாக வெந்த சாதம், சிக்கன் கிறேவி எதுவும் உடையாமல் கீழிருந்து மேலாக இரு முறை பிறட்டி விட்டும் மீண்டும் ஐந்து நிமிடம் தம்மில் வீட்டு அடுப்பை அனைத்து விட்டு மேலும் ஐந்து நிமிடம் விட்டு பிறகு எடுத்து சாப்பிடவும்.

வழங்கியவர்

ஜலீலா, துபாய்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 person 25 min 45 min
  random food image


comments
டியர் நிருப்பமா(சிக்கன் பிரியாணி)
பிப்ரவரி 26, 2008 - 2:24am - வழங்கியவர் Jaleela Banu

டியர் நிருப்பமா(சிக்கன் பிரியாணி)
உங்களுக்காகவே நான்கு பேர் சாப்பிடும் அளவு.
ஜலீலா

Thanks a lot
பிப்ரவரி 26, 2008 - 5:43am - வழங்கியவர் Nirupama

Dear jaleela madam,
Thank you very much for your recipe and your quick response.I am recently married and i am in the initial stage of learning cooking.Experts like you helping learners like us and we feel like learning it.I have some doubts in this biriyani.
1. I need rice,onion,tomato,curd,ginger,
garlic,oil in grams measurement(for your chicken biriyani recipe for 4 people) as you gave for mutton biriyani.

If you give bulk measurement like mutton biriyani also ok for me,i can reduce to 4 people and make.
But i need it in grams.Will you help me? Since i am going to make chicken biriyani first time and i don't want to mess it up.I like to try this week end and let u know the feedback.I am eagerly waiting for your reply.Thanks in advance.Bye.

பழக பழக தான் நல்ல வரும்(நிருப்பமா)
பிப்ரவரி 26, 2008 - 7:15am - வழங்கியவர் Jaleela Banu

நிருப்பமா ஒன்றும் கவலை வேண்டாம் நாலு நபர் என்பது எல்லாம் பெரிய ஆட்களா.(அ) சின்ன பங்களுமா?

இப்போதைக்கு இந்த சிக்கன் பிரியாணியை டிரை பண்ணுங்கள்.
நான் படத்துடன் கொடுக்க முயற்சிகிறேன்.
என் ரெஸிபி முக்கால் வாசி நான் டெய்லி நாலு பேருகு செய்வது தான் ஆனால் நான் காரம் கம்மியாக போடுவேன்..
தேவைக்கு சேர்த்து கொள்ளுங்கள்.
உப்பு மட்டும் பார்த்து போடுங்கள்.
சிக்கன் வேகும் போதும் போடனும், அரிசி உலை கொதிக்கும் போதும் போடனும்.
தீயை குறைத்து வைத்தே செய்யுங்கள்.
அப்பதான் அடி பிடிகாது.
கிட்ட நின்று கிளறும் போது அதிக படுத்தி கொள்ளுங்கல்.
யாருக்குமே பழக பழக தான் நல்ல வரும்.
இதை இரண்டு முறை செய்யுங்கள்.
நீங்களே கண்டு பிடிங்க என்ன விட்டு போச்சுன்னு முன்றாவது முறை கண்டிப்பாக சரியாக வரும்.

நான் இருகிறேன் என்ன வேணுமோ கேளுங்கள்.
ஒன்று தெரியுமா, இடியாப்பம் எல்லோரும் செய்கிறார்களே நமக்கு மட்டும் ஏன் வர மட்டுங்கிறது என்று செய்து பார்த்து செய்து பார்த்து கடைசியில் பதினைந்தாவது முறை ஜெயித்தேன். ஏழு வருடங்களுக்கு முன். ஆ ஆ ஹா ஹா ஹி ஹிஹி
மட்ட்ன் பிரியாணி அவசரம் என்றால் ஒன்லி ரெஸிபி மட்டும் உடனே த்ருகிறேன்.

ஜலீலா

Thanks
பிப்ரவரி 26, 2008 - 8:03am - வழங்கியவர் Nirupama

Dear jaleela akka,
Thanks for yor reply.Your kind words are making me to learn more.Thanks.From my husband's office we are calling 2 people, and we two,so alltogether for 4 people.
Your mutton biriyani(kalyana biriyani) recipe is very clear for me and as of now i don't need any mutton biriyani recipe.But,i need chicken biriyani recipe only.Can you compare your mutton biriyani (kalyana biriyani)recipe and tell your chicken biriyani recipe with gram measurements.When guests are coming, i don't want to spoil it(since i don't know much about measurements of howmuch to put),that's why i am asking.If you give exact gram measurements for chicken biriyani, i will do it in a hope that it will come out good.If you give bulk measurement for chicken biriyani also it's ok for me,i can reduce it to 4 people and make.But i need it in grams measurement only.Sorry for troubling you akka.Can you reply me in my mail-id? My mail id is nirupama18_vs@yahoo.co.in
I am very eagerly waiting for your reply.Thanks in advance.Bye.

ok Nirupama
பிப்ரவரி 26, 2008 - 8:34am - வழங்கியவர் Jaleela Banu

ok Nirupama, Please wait right now i am little busy . I will send you soon.

Jaleela

Thanks akka
பிப்ரவரி 26, 2008 - 9:06am - வழங்கியவர் Nirupama

Thanks akka

ஜலீலா அக்கா, சிக்கின்
பிப்ரவரி 27, 2008 - 4:19am - வழங்கியவர் அதிரா

ஜலீலா அக்கா, சிக்கின் பிறியாணி சுப்பர். சோறு பிறியாணி பதத்திற்குச் சமைத்து, சிக்கினுடன் பிரட்டினேன். மிக அருமை. சோறு வடி கட்டி செய்யவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சிக்கன் பிரியாணி
பிப்ரவரி 27, 2008 - 4:26am - வழங்கியவர் Jaleela Banu

சிக்கன் பிரியாணி
அதிரா நல்ல இருக்கீங்களா
செய்து பர்த்ததற்கு மிக்க நன்றி.

ஜலீலா

சிக்கன் பிரியாணி(நிருப்பமா)
பிப்ரவரி 27, 2008 - 4:29am - வழங்கியவர் Jaleela Banu

சிக்கன் பிரியாணி
நிருப்பமா உங்களுக்கு நாலு முறை மெயில் செய்தும் திருப்ப எனக்கே பவுண்ஸ் ஆகுது.

நான் இங்கேயே உங்களுக்கு கொடுக்கிறேன்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
ஜலீலா

Dear Jaleela Akka, Try with
பிப்ரவரி 27, 2008 - 5:20am - வழங்கியவர் Nirupama

Dear Jaleela Akka,
Try with nirupama18_vs@yahoo.com.

நிருப்பமா (சிக்கன் பிரியாணி)
பிப்ரவரி 27, 2008 - 8:36am - வழங்கியவர் Jaleela Banu

நிருப்பமா
கரெக்ட்டாக போடவேண்டம்(கெஸ்ட் வருவதால்)
கொஞ்சம் கூடவே கொடுத்துள்ளேன்.
அரை படி அரிசி, ஒரு படி என்றால் மதிய உணவிற்கு எட்டு நபர் சாப்பிடலாம்.அரைபடி 4 டம்ளர் நாலு பேர் தாராளமாக சாப்பிட அந்த அளவு கொடுத்துள்ளேன்.
.

மீதி மெத்தெடு என் பிரியாணியில் உள்ளபடி செய்யவும்

rice - 4 glass (800 gram)
chickhen - 1 kg
oil - 200 grams (anything your wish (ghee + oil)
onion - 400 gram
tomato - 400
ginger, garlic - 125
curd - 100 gram
green chilli - 8
red chilli powder - 4 teaspoon
corriander leaves - 1 bunch
mint leaves - 1/2 bunch
greeen chilli - 7

Jleela

veg briyani
பிப்ரவரி 27, 2008 - 8:47am - வழங்கியவர் Vijitvm

Hi Jaleela mam,
I am Viji Naan ungal resigai. I am vegetarian. Enaku veg biriyani recipi kudungal. Thanks. Nann nerru ungaluku pathil panni iruthen. Nannum ungal mantram thil join pannuvatharku. Ithuvarai pathil etum illay.

Thanks

குழந்தைக்கு constipation
பிப்ரவரி 28, 2008 - 9:45am - வழங்கியவர் Vijitvm

ஜலிலா மேடம்,
எப்படி இருக்கிங்கா?
இது விஜி ஞாபகம் இருக்கா. எனக்கு ஒரு ட்வுட் என் 19 மாத பென் குழந்தைக்கு மல சிக்க்ல் அடிக்க்டி வருக்கிறது. ரொம்ம்ப் கஷ்ட்டபடுகிறா. எதாவது விட்டு மருந்து சொல்லுங்க.

நன்றி

விஜி,
பிப்ரவரி 29, 2008 - 1:24am - வழங்கியவர் அதிரா

என்னுடைய குழந்தைகளுக்கு எங்கள் அம்மா தினமும் காலையில் எழுந்து தேனீர் தயாரிக்கும்போது ஒரு மேசைக்கரண்டி ஓமத்தை அப்படியே பச்சையாக போட்டு கொதிநீர் விட்டு மூடிவிடுவார். ஆறியதும் மெல்லிய துணியால் வடித்து சூப்பியில் கொடுப்பார். தினமும் காலையில் இப்படி செய்தால் மலச்சிக்கல் வராது. ஒறேஞ் வாங்கி கரைத்து வடித்துக் கொடுத்து வாருங்கள். இவை இரண்டும் மிக நல்லது. எனக்கு தெரிந்தது இவைதான். ஓமம் மெல்லிய தேனீர்போல் இருக்க வேண்டும். குடிக்க மறுத்தால் கொஞ்சம் சீனி போடுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி
பிப்ரவரி 29, 2008 - 8:37am - வழங்கியவர் Vijitvm

நன்றி அதிரா,

நான் ட்ர்ய் பன்ரென்.

ஹலோ விஜி உங்க பெண் குழந்தைக்கு
மார்ச் 1, 2008 - 1:43am - வழங்கியவர் Jaleela Banu

ஹலோ விஜி உங்க பெண் குழந்தைக்கு மல சிக்கல் என்று சொன்னீர்கள்.

1. சோம்பு லேசாக வருத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ஒரு பலாடை (அ) ஒரண்டு மேசை கரண்டி அளவு வற்றவிட்டு கொடுங்கள்.
2. விளக்கெண்ணையை வயிற்றில் தேய்த்து விடுங்கள்.
3. தேங்காயை கொரகொரப்பாக அரைத்து அதில் ஒரு வாழைபழம்,சர்க்கரை, சிறிது பால் சேர்ஹ்த்டு பிசைந்து ஒரு கிண்ணத்டில் வைத்து சாப்பிட கொடுங்கள்.
4. வயறு செமிக்காமல் இருக்கு அதனால் தான் அத்தி பழம் கொடுத்தால் கூடா மோஷன் பிரீயாக போகும்.
5. வயைறி நிறைய சாப்பாடு கொடுங்கல்.
6 சூப், ஜுஸ், சாதம் டிபன் வகைகள்,. சூடாகா வெண்ணீர் குடிக்கிற பக்குவத்தில் அருந்ஹ்ட கொடுங்கள்.
ஜலீலா

தாங்ஸ்
மார்ச் 1, 2008 - 8:47am - வழங்கியவர் Vijitvm

ஜலிலா மேடம்,

தாங்ஸ்

நான் உடனே ட்ர்ய் பன்றேன். ரொம்ப நன்றி.

Delicious recipe
மார்ச் 2, 2008 - 8:57am - வழங்கியவர் Nirupama

Dear jaleela akka,

I tried your chicken biriyani.The taste is delicious and yummy and tasting like hotel biriyani.My guests appreciated me a lot.But,the credit goes to you only not me.Thanks for helping me.Please continue posting nice recipes like this.All viewers from arusuvai can try this,it's tasting very good.

Nirupama

சிக்கன் பிரியாணி (நிருப்பமா)
மார்ச் 2, 2008 - 9:20am - வழங்கியவர் Jaleela Banu

மிக்க நன்றி நிருப்பமா செய்து பார்த்து வாழ்த்தியதற்கு.
நீங்க வாழ்த்தியது தெம்பா ஒரு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு.
ஜலீலா

லலிதா, பிரியா82, ரேணுகா
மே 14, 2008 - 11:56pm - வழங்கியவர் Jaleela Banu

பிரியா இந்தாங்க சிக்கன் பிரியானி புரிய்தான்னு பாருங்க

மர்லிய தலை சுற்றல் பராவாயில்லையா, தளிக்கா ஜுரம் எப்படி இருக்கு, குபூஸுக்குகாக என்க்காக பதில் அளித்த தோழிகளுக்கு நன்றி.

லலிதா நீங்க வெஜ் ஆ நான் வெஜ் ஆ சொல்லவும்.
கொஞ்ச பிஸியா இருக்கேன் வந்து சொல்றேன் பா

ரேணுகா உங்களுக்கும் தான்.

ஜலீலா

ஜலீலா!..பிரியாணி
மே 15, 2008 - 12:32am - வழங்கியவர் malathi

இந்த பிரியாணி செய்முறை நன்றாக இருக்கிறதே.... பொதுவாக பிரியாணி மட்டும் நாம் வழக்கமாக செய்யும் முறையில்தான் செய்வோம். ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டோம். ஆனால் இந்த பிரியாணி சூப்பரா இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

ஜலீலாக்கா
மே 15, 2008 - 12:57am - வழங்கியவர் thalika

ஜலீலாக்கா உருட்டுக்கட்டையால் நல்ல போட்ட மாதிரி உடம்பு வலியும் ..குளிர் தாங்க முடியல.
பயனம் மட்டுமல்ல இப்ப தான் யோசிக்கிறேன் 1 கப் பக்கம் மாங்காய் ஊறுகாய நல்ல காரமாக சாப்பிட்டேன் பயனம் முடிஞ்சு வந்ததும்.அதான் செம்மையா சூடு ஏறிடுச்சு போல.
சரி நான் இப்ப குளிர்ச்சியா என்ன சாப்பிட்டால் சரியாகும்?ஜெ வின் ஜீரகத் தண்ணீருகு மட்டும் தெம்பு இருந்தது செய்து குடித்தேன்.

தளிகா,சீரக கஞ்சி
மே 15, 2008 - 1:47am - வழங்கியவர் Jaleela Banu

தளிகா, பதில் போட டைம் இல்லை இல்லையெனாறல் காலையிலேயே பதில் அளித்திருப்பேன்.

சீரக தண்ணீர் ஒகே, சீரக கஞ்சி (அ) ஏதாவது கஞ்சி குடிங்க.
வெள்ளை கஞ்சி, புதினா சட்னி.
மாங்காய் ஒரு கப்பா அப்ப கண்டிப்பா வரும்.

ஹா ஹா
ஜலீலா

சிக்கன் பிரியாணி
மே 15, 2008 - 1:49am - வழங்கியவர் Jaleela Banu

மாலதி யக்காவ் ரிஸ்க் எடுங்க,சிக்கன் பிரியாணி கண்டிப்பா நல்ல வரும்.
செய்து பார்த்துட்டு சொல்லுங்கள்.

ஜலீலா

தளிகா என்னாச்சு
மே 15, 2008 - 7:43am - வழங்கியவர் Vijitvm

எந்த ஊருக்கு பயனம் செய்திங்க? நன்றாக ரெஸ்ட் தேவை எடுங்க. நல்ல மிளகு ரசம், பருப்பு துவையல், சுட்ட அப்பளம் வைத்து சாப்பிடுங்க. சுக்கு காப்பி போட்டு குடியுங்க. மாங்காய் எல்லாம் சப்பிடறிங்க. என்ன ஏதாவது ஸ்பெஷல்லா..
குளிர்ச்சிக்கு நன்றாக க்ரேப் ஜூஸ் குடிய்ங்க,ம்சாலா எதுவும் நிற்ய்ய இல்லாமல் ghee rice சாப்பிடுங்க நிற்ய்ய வெள்ளரி பச்சடி,செய்த்டு சாப்பிடுங்க.வெள்ளை பூசணி புளிப்பு கூட்டு சாப்பிடுங்க, மாங்காய் 1 கப் சாப்பிட்டால் இன்னும் உடம்ம்பு சூடு ஏறும். மாங்காய்,பப்பாளி இதெல்லாம் சூடு. பார்த்து சாப்பிடுங்க நல்ல லெமன் ரசம், லெம்ன் ரைஸ் சாப்பிடுங்க.

உடம்புக்கு நல்ல ரெஸ்ட் தேவை