பைன்கோன் கொண்டு அழகிய பூக்கள் செய்வது எப்படி?

தேதி: February 26, 2008

4
Average: 4 (4 votes)

பைன்கோன் என்பது பைன் மரத்தின் சூல்வித்தகமாகும். பொதுவாக பெண் பைன் மரத்தின் கோன்கள் அழகான வடிவத்தில் இருக்கும். இந்த பைன்கோன் பூக்கள் செய்வதற்கு, பூப்போன்ற வடிவத்தில் இருக்கும் கோன்களே சிறாந்தது. ஈரோப்பா, வ அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட ஆசியா நாடுகளில் இவை கிடைக்கும். அமெரிக்காவில் மேற்கு கரையில் (West Coast - Washington, Oregon, California) வசிப்போருக்கு எளிதில் கிடைக்கும். late summer, early fall ஸீசனில் கிடைக்கும். இலங்கையிலும் மலை நாட்டுப்பக்கம் ஒரு வகையான பைன் கோன் கிடைக்கும். இந்தியாவிலும் வட இந்தியாவில் கிடைக்கும். - நர்மதா

 

பைன் கோன் - 7 - 12 (அல்லது தேவையான அளவு)
பெயின்ட் - விரும்பிய நிறங்கள் & பச்சை
பெயிண்டிங் பிரஷ்
ஹாட் க்ளூ (Hot Glue - Glue gun)
நீளமான மரக் குச்சிகள்

பூச்சாடிக்கு:

காலியான மோக்கா(Mocca) போத்தல்(குடுவை) - 1 (அல்லது அழகிய வடிவமுள்ள ஏதாவது சிறிய/ பெரிய போத்தல்)
பிளாஸ்டிக் இலைகள்
பலவர்ண மார்பிள்கள்
சில்க் ரிப்பன் - 8"

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராய் எடுத்து வைக்கவும்.
பூக்கள் போன்று உள்ள பைன் கோன்களை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளவும். பைன் கோனை நன்கு சுத்தப்படுத்தி காயவைத்து எடுக்கவும். பின்னர் அதன் அடிப்பாகத்தில் கூரான கத்தியால் சிறிய துளை இடவும்.
பின்னர் பைன் கோனின் மேற்புறத்தில் விரும்பிய வர்ணம் தீட்டி காய விடவும்
பெயிண்ட் நன்கு காய்ந்ததும் பைன் கோனை திருப்பி அடிப்பாகத்தில் பச்சை வர்ணம் தீட்டவும்.
பூவின் மற்றைய பாகங்களுக்கு மேற்பக்கம் தீட்டிய அதே வர்ணம் தீட்டி காய வைக்கவும். நிறங்கள் பிரைட்டாக இல்லாவிட்டால் காய வைத்து மீண்டும் வர்ணம் பூசவும்.
இவ்வாறு அனைத்து பைன் கோன்களிற்கும் வெவ்வேறு வர்ணங்கள் தீட்டி காய விடவும்.
பின்னர் மரக்குச்சிகளை வெவ்வேறு நீளத்தில் வெட்டி ஹாட் க்ளூ அல்லது வேறு கெட்டியாக பிடிக்கக்கூடிய க்ளூவினால் பைன் கோனில் அடிப்பாகத்தில் போட்ட துளையில் வைத்து ஒட்டி காய விடவும். இப்படியே அனைத்து பைன்கோன்களுக்கும் செய்யவும்.
இப்படி செய்த பைன் கோன்களை தனியே பூச்சாடிகளில் வைத்து அழகுபடுத்தலாம்.
இலகுவான பூச்சாடி செய்வது:- காலியான மோக்கா போத்தலை நன்கு சுத்தப்படுத்தி காய வைத்து அதனுள் பலவர்ணங்களுடைய மார்பிள்களை போட்டு அதனுள் பைன் கோன்களையும் பிளாஸ்டிக் இலைகளையும் வைத்து ஒழுங்குபடுத்தவும். பின்னர் ஸில்க் ரிப்பனால் போத்தலின் விளிம்பை சுற்றி போ(Bow) மாதிரி கட்டி விடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பைன்கோன் பூவெல்லாம் பார்ப்பதற்க்கு ரொம்ப அழகா இருக்கு... ஆனா பைன்கோன்கள் எஙகே கிடைக்குமென்று தெரியவில்லை. இதையே பைன்கோன்கள் இல்லாமல் வேறு எதையாவது வைத்து செய்யமுடியுமா என்று சொல்லவும்?

ஹாய் நர்மதா, ரொம்ப அழகா இருக்கு. பைன்கோன்கள் எங்கு கிடைக்கும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

enna paint use pannaum?

acrylic or enamal, or metallic which paint to use.
pls tell me

வணக்கம் நர்மதா உங்களுடைய
பைன் கோன் பூக்கள் செய்து
பார்த்தேன் மிக அழகாக வந்தது
உங்களுக்கு நன்றி. நானும் யாழ் நகர் தான்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta