உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பிஃஷ் கறி

 


தேவையானப் பொருட்கள்

  • மீன் - 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 1 அல்லது 2
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1 அங்குலம்
  • பூண்டு - 8 பல்
  • மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • மல்லி இலை - சிறிதளவு
  • எண்ணெய் - தாளிக்க
  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

  • மீனை கழுவி சுத்தம் செய்து 1 அங்குல கன சதுர துண்டுகளாக்கிக் மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டு,பிறகு அரைத்த விழுதை நன்கு வதக்கவும்.
  • பின் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு போட்டு வதக்கி தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் மீனை போட்டு கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
  • இறுதியில் மல்லி இலை தூவி சூடாக சப்பாத்தி,பூரி,நான் அல்லது பரோட்டாவுடன் பரிமாறவும்.

குறிப்பு:

இதற்கு முள் இல்லாத மீன் அல்லது முள் குறைவாக கிடைக்கும் மீனில் செய்தால் சுவையாக இருக்கும்.

வழங்கியவர்

ஸ்ரீகீதா மகேந்திரன்、ஜப்பான்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 நபர்கள் 15 நிமிடங்கள் 15 நிமிடங்கள்
  random food image


comments