தேவையானப் பொருட்கள்
- மீன் - 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1 அல்லது 2
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 1 அங்குலம்
- பூண்டு - 8 பல்
- மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - தாளிக்க
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
- மீனை கழுவி சுத்தம் செய்து 1 அங்குல கன சதுர துண்டுகளாக்கிக் மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டு,பிறகு அரைத்த விழுதை நன்கு வதக்கவும்.
- பின் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு போட்டு வதக்கி தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்தவுடன் மீனை போட்டு கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- இறுதியில் மல்லி இலை தூவி சூடாக சப்பாத்தி,பூரி,நான் அல்லது பரோட்டாவுடன் பரிமாறவும்.
-
குறிப்பு
இதற்கு முள் இல்லாத மீன் அல்லது முள் குறைவாக கிடைக்கும் மீனில் செய்தால் சுவையாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 நபர்கள் |
15 நிமிடங்கள் |
15 நிமிடங்கள் |